PulseNews
சினிமா

முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தைச் சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் விதமாக சில வசனங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தற்போது இந்த வசங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திப்போவதற்கான வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு , ஷிவராஜ்குமார், வித்யா பாலன் , மோகன்லால் , விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது

விஜயை விமர்சித்து வசனங்கள்

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதே காலகட்டத்தில் விஜய் அவர்கள் அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர அரசியல் பரப்புரையை மேற்கொண்டு வந்தார். வெளியாகியுள்ள தகவலின்படி ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் விஜயை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் தற்போது விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று வரும் நிலையில் இந்த வசனங்கள் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் படக்குழு இந்த வசனங்களை நீக்கி அதற்கு பதிலாக புதிய காட்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதல் படப்பிடிப்பு காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. அதன்படி தீபாவளியை ஒட்டி ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அறிவிப்போ விளக்கமோ இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2
PulseNews சுருக்கம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இப்படத்தில் முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்த வசனங்கள் நீக்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளால், படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema