PulseNews
சினிமா

ஒரே மாதத்தில் 3 மெகாஹிட் படங்கள்; ராக்கெட் வேகத்தில் எகிறும் சம்பளம்: அதிஷ்ட நாயகி ஆன மமிதா பைஜூ

தென்னிந்திய சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகை மமிதா பைஜூ நடித்த கடைசி 5 படங்கள் ரூ100 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை வசூலிக்கும் படங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ள அவர், தென்னிந்திய சினிமாவின் அதிர்ஷ்ட நாயகியாகவும் உருவெடுத்துள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு திரையுலகுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் மமிதா, இந்திய சினிமாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளின் வரிசையிலும் இடம்பிடித்து வருகிறார். இந்த ஓணம் பண்டிகை காலத்தில் திரையரங்குகளில் வெளியான மமிதாவின் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்’ ஆகிய இரு படங்களும் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த இரு படங்களுமெ குறைந்த நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்த தற்போது மேலும் பல சாதனைகளை நோக்கி முன்னேறி வருகின்றன. சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ஏற்கனவே 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துவிட்டது. அதேபோல், நிவின் பாலி நடித்துள்ள ‘பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்’ திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருவதுடன், உலகளவில் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான மமிதா பைஜு, ‘பிரேமலு’ திரைப்படத்தில் நடித்த ‘ரீனு’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்றார். ‘பிரேமலு’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மமிதா நடித்த ‘டூட்’, ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லஹேம் குடும்பா யூனிட்’ என தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஐந்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளன. திரைப்படங்களின் தொடர் வெற்றியுடன் மமிதாவின் நட்சத்திர மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. ‘பிரேமலு’ திரைப்படத்திற்காக ரூ.8 லட்சம் சம்பளம் பெற்ற மமிதா, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடிக்கும் நேரத்தில் தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தியுள்ளார். விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக ரூ.75 லட்சம் சம்பளம் பெற்ற மமிதா, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரே மாதத்தில் 3 மெகாஹிட் படங்கள்; ராக்கெட் வேகத்தில் எகிறும் சம்பளம்: அதிஷ்ட நாயகி ஆன மமிதா பைஜூ
PulseNews சுருக்கம்

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகை மமிதா பைஜூவின் கடைசி ஐந்து திரைப்படங்கள் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. பாக்ஸ் ஆபிஸில் கோடிகளைக் குவிக்கும் நாயகியாக உருவெடுத்துள்ள அவர், தென்னிந்திய சினிமாவில் அதிர்ஷ்டம் தரும் நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார்.

பல்வேறு திரையுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் மமிதா, தற்போது இந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். ஓணம் பண்டிகை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் உட்பட, ஒரே மாதத்தில் மூன்று மெகாஹிட் படங்களை வழங்கியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema