வலுக்கட்டாயமாக நடிகையின் உதட்டில் முத்தம்! ரசிகையின் செயலால் நிகழ்ச்சியில் பரபரப்பு!
இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வருபவர் நடிகை நிகிதா ராவல். அங்கு 'பிளாக் & ஒயிட்', 'மிஸ்டர் ஹாட் மிஸ்டர் கூல்', 'தி ஹீரோ – அபிமன்யு', 'அம்மா கி போலி' உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் 2012-ல் 'டிம்பா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வரும் இவர் சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது ரெட் கார்பெட்டில் பங்கேற்ற அவர் ஒரு பெண் ரசிகையால் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெட் கார்பட்டில் அவர் நின்றுகொண்டிருந்த போது ஆவலுடன் ஓடி வந்த ஒரு பெண் ரசிகை நடிகையுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டார். நடிகையும் அந்த ரசிகையுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். பின்பு உடனே அந்த ரசிகை நடிகையின் கண்ணத்தில் முத்தமிட்டார். அதை அன்பாக ஏற்றுக்கொண்ட நடிகையிடம் அந்த ரசிகை திடீரென வலுக்கட்டாயமாக நடிகையின் உதட்டில் முத்தம் கொடுத்தார். இதனால் சில நொடி அதிர்ச்சியடைந்த நடிகை பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பினார். பின்பு அந்த ரசிகையை அங்கிருந்த ஒருவர் அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென அந்த ரசிகை செய்த செயல் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்த அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை நிகிதா ராவல், மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியின் ரெட் கார்பெட் பகுதியில் அவர் நடந்து சென்றபோது, அங்கு வந்த பெண் ரசிகை ஒருவர் எதிர்பாராதவிதமாக நடிகையின் உதட்டில் முத்தமிட்டார்.
இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த நடிகை நிகிதா ராவல், நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'பிளாக் & ஒயிட்', 'டிம்பா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகைக்கு நேர்ந்த இந்த அசம்பாவிதம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.