வேதனையுடன் வீடியோ வெளியிட்ட இயக்குநர் - உடனடியாக அழைத்த சிம்பு
உலக சினிமா வரலாற்றில் தனி ஒரு மனிதனாக 72 துறைகளையும் கவனித்து ‘ஒன் மேன்’ என்ற படத்தை உருவாக்கினார் சங்ககிரி ராஜ்குமார். இப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியானது. ஆனால் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் சங்ககிரி ராஜ்குமார் அண்மையில் வேதனையுடன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் “இந்த படத்திற்காக கடன் வாங்கி கடுமையாக உழைத்தேன். ஆனால் வெறும் கையோடு இப்போது ஊருக்கு திரும்பி வந்திருக்கிறேன். வெளிநாடுகளில் பெரிய பட்ஜெட் படத்தையும் ரசிக்கிறார்கள், சிறிய பட்ஜெட் படத்தையும் ரசிக்கிறார்கள். அங்கு ஒரு இயக்குநரின் புதிய முயற்சியை அரசாங்கமே விளம்பரப்படுத்த உதவுகிறது. ஆனால் நம் ஊரில் அப்படி இல்லை. சினிமாவுக்கென ஒரு தனி துறை இருந்தும் எனது படத்திற்கு போதிய உதவியை செய்யவில்லை. இதனால் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டேன். சிறிது காலம் காட்டு வேலை, தெருக்கூத்து போன்றவற்றில் ஈடுபடவுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது சிம்பு சங்ககிரி ராஜ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை சங்ககிரி ராஜ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சிம்புவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தளர்ந்திருந்த நேரத்தில் தட்டிக் கொடுத்த தங்க குணத்திற்கு மிக்க நன்றி சார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ONE MAN திரைப்படத்திற்காக தனது பாராட்டுகளை தெரிவித்தார் திரு சிலம்பரசனSTR சார். தளர்ந்திருந்த நேரத்தில் தட்டிக் கொடுத்த தங்க குணத்திற்கு மிக்க நன்றி சார்🙏🙏 #onemanmovie# #silambarasan tr #simbu pic.twitter.com/D60yYTnaQF — Sankagiri RAJKUMAR (@Rajkumar_Dir) August 31, 2026

உலக சினிமா வரலாற்றில் 72 துறைகளைத் தானே கவனித்து 'ஒன் மேன்' என்ற படத்தை சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கினார். கடந்த 21-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இதனால் கடும் வேதனையடைந்த இயக்குநர், தாம் கடன் வாங்கி கடுமையாக உழைத்ததாகவும், தற்போது வெறும் கையாக ஊருக்குத் திரும்பியிருப்பதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்தார். இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் சிம்பு, உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.