“இந்திய சினிமாவுக்கு புதிது... ஹாலிவுட் தரத்தில் கதை...” ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி!
ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் வினோதமான மிருகம் போல் ஒன்று வருகிறது. அதன் பின்னணியில் திகில் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகயுள்ளது. அதனால் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஜி.வி. பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில், “இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை. முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி. கயாடு லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். இப்படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லரில் விசித்திரமான மிருகம் ஒன்று காட்டப்பட்டுள்ளதால், இது திகில் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.