PulseNews
சினிமா

பழம் பெரும் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

தமிழ், தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பழம் பெரும் நடிகை சவுகார் ஜானகி. திரைத்துறையில் ‘ஷவுகாரு’(1950) என்ற தெலுங்கு படம் மூலம் நுழைந்த அவர் தமிழில் ‘வளையாபதி’(1952) படம் மூலம் அறிமுகமானார். பின்பு பணம் படுத்தும் பாடு(1954), புதிய பறவை(1964), மகாகவி காளிதாஸ்(1966), எதிர் நீச்சல்(1968) எனத் தொடங்கி தில்லு முல்லு(1981), ஹே ராம்(2000) என பிளாக் அண்ட் ஒயிட் கலாம் முதல் இன்றைய நவீன சினிமா வரை அவர் நடித்துள்ளார். கடைசியாகத் தமிழில் சந்தானம் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் தோன்றினார். திரையில் இவரது பங்களிப்பைப் போற்றும் விதமாகக் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. 94 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பூரண குணமடைய அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பழம் பெரும் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!
PulseNews சுருக்கம்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மூத்த நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1950-ல் ‘ஷவுகாரு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், 1952-ல் ‘வளையாபதி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.

பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், தில்லு முல்லு மற்றும் ஹே ராம் எனப் பல வெற்றிப் படங்களில் இவர் நடித்துள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் நவீன சினிமா வரை நீண்ட திரைப்பயணத்தைக் கொண்டுள்ள இவர், கடைசியாக சந்தானம் நடித்த படத்தில் நடித்திருந்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema