“ஆபாசம் என்பது தவறு தான். ஆனால்...” - நடிகை விமர்சனமும் யஷ் பதிலும்!
'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியான ‘தபாஹி’ பாடலில் யஷ் - கியாரா அத்வானி நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில் அது விமர்சனத்துக்கு உள்ளானது. பின்பு அண்மையில் வெளியான டிரெய்லரிலும் பெண்கள் கவர்ச்சியாக வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனை கடுமையாக விமர்சித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகை ரிஷிகா சிங் வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது, “கன்னடத் திரையுலகம் சர்வதேச அளவில் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த வகையில் 'டாக்சிக்' போன்ற ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் கன்னடத்தில் தயாராவதும், அதில் பாலிவுட் நடிகை ஒருவர் இடம்பெற்றிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ரிஷிகா சிங் ஆனால், இப்படத்தின் ட்ரெய்லரில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. இப்படத்தில் ஐந்து பெண் நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரையாவது கண்ணியமாகவோ அல்லது சிறப்பான முறையிலோ காட்டினார்களா? கியாரா அத்வானியை பாலிவுட்டிலிருந்து அழைத்து வந்து, இப்படிப்பட்ட விதத்தில் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன? பெண்களுக்கு மரியாதை அளிக்கப்படாவிட்டால், உங்களை கர்நாடகாவை விட்டு வெளியேறச் செய்வோம்” என்றிருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்த அதற்கு யஷ் பின்பு ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ஆபாசம் என்பது தவறு தான். ஆனால் அதில் நான் எந்த முத்த காட்சியிலும் நடிக்கவில்லை. முழுப் படத்தை பார்த்துவிட்டு இறுதி முடிவுக்கு வாருங்கள். சில காட்சிகளின் அர்த்தம் முழு கதையையும் பார்த்தால் மட்டுமே சரியாகப் புரிந்துகொள்ள முடியும்” என்றுள்ளார்.

கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் யஷ், கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு, ஆகஸ்ட் 26 அன்று பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
முன்னதாக வெளியான ‘தபாஹி’ பாடலில் இடம்பெற்ற யஷ் மற்றும் கியாரா அத்வானியின் நெருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து நடிகை ஒருவர் விமர்சித்த நிலையில், அதற்கு யஷ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.