‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!
மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்... காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா நடித்துள்ளார். [...]
வழக்கமாக திருமணத்திற்குப் பின் மணமகள் புகுந்த வீட்டிற்குச் செல்வது மரபு. ஆனால், அதற்கு மாறாக மணமகன் தனது உடைமைகளுடன் மணமகள் வீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும் என்ற சுவாரசியமான கதைக்களத்துடன் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் தளம் இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இதில் இளன் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.