‘டேய் தம்பி இங்க வாடா...’ - சொந்த ஊரில் காய்கறி விற்ற விமல்!
நடிகர் விமல் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் திரைக்கு அப்பால் அவர் செய்யும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவர் கொடுக்கும் நேர்காணல்கள், பொதுவெளியில் சகஜமாக நடனமாடுவது, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு யதார்த்தமாகப் பதில் சொல்வது என சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சந்தையில் அவர் காய்கறி விற்பனை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அவரது சொந்த ஊரான பன்னாங்கொம்பு பகுதியில் புதிதாக வார சந்தை துவங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் படப்பிடிப்புக்கு சென்ற விமல் சந்தையை பார்த்ததும் உள்ளே சென்று அங்கிருந்த வியாபாரிகளுடன் காய்கறிகளை விற்பனை செய்தார். ‘டேய் தம்பி இங்க வாடா...’ என ஒரு தம்பியை அழைத்து காய்கறி விற்றார். மேலும் பல்வேறு நபர்களுக்கு காய்கறி விற்பனை செய்தார். பின்பு அருகிலிருந்து வியாபாரிகளுக்கு ஆளுக்கு ரூ.500 கொடுத்து மகிழ்ந்தார். விமலின் செயல் அங்கிருந்தவர்களைக் கவர உடனே அவரை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். பின்பு, அருகிலிருந்து வியாபாரிகளுக்கு ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்துக் கிளம்பிவிட்டார்.

நடிகர் விமல் திரையுலகில் பிஸியாக இருந்தாலும், பொதுவெளியில் அவர் இயல்பாகச் செயல்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தற்போது தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்புவில் வாரச்சந்தை ஒன்றைத் தொடங்கி, அங்கு அவர் காய்கறிகளை விற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேர்காணல்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் விமல் வெளிப்படுத்தும் எதார்த்தமான செயல்பாடுகள் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், இந்த வீடியோவும் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.