மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை; இயற்கையோடு பொழுதை கழிக்கும் கேப்டன் பட நடிகை: இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை உமா சங்கரி புற்றுநோய் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4-ம் கட்ட சிகிச்சை தொடங்குவதற்கு முன் அவர் தனது தோட்டத்தில் இயற்கையுடன் நேரம் கழித்த புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். பணக்காரன் திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மா கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை சுமித்ரா. இவரின் மகள் தான் நடிகை உமா சங்கரி. கடந்த 2000-ம் ஆண்டு சீமான் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வீர நடை படத்தின் மூலம் தமழ் சினிமாவில் அறிமுகமான இவர், அர்ஜூனுடன் வானவில், முரளியுடன் கடல்பூக்கள், பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் படத்தில் அவரின் தங்கை மரகதம் கேரக்டரில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்த இவர், தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழகளிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மார்பகப் புற்றுநோயுடன் போராடி வரும் நிலையில், தனது சிகிச்சை தொடர்பான தகவல்களை தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், கீமோதெரபியின் 2-ம் கட்டம் நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், இது கீமோ/இம்யூனோதெரபி இரண்டாம் கட்டமாகும், நான் ஒவ்வொரு நாளையும் கடந்து முன்னேறி வருகிறேன். கடினமான நாட்களை எவ்வாறு கையாள்வது என்பதை நான் கற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கு உடல்நிலை நன்றாக, தெம்பாகத் தோன்றும் நாட்களை நான் கொண்டாடுகிறேன். எப்போதும் என்னுடன் இருக்கும் எனது குடும்பத்தினருக்கும், அன்பு மற்றும் ஆதரவளிக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி. நான் எனது கடமையைச் செய்து, குணமடைந்து வருகிறேன், அத்துடன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த முன்னேற்றம் முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது உண்மையானது," என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது 3-ம் கட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் 4-ம் கட்ட சிகிச்சை நடைபெற உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உமா சங்கரி குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram A post shared by D R UmaShankari (@uma_shankarii_) 4-ம் கட்ட சிகிச்சைக்கு முன்பு, தனது தோட்டத்தில் செடி, மரம், கொடிகளுடன் நேரத்தை கழித்துள்ள உமா சங்கரி இது குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு, பல நாட்களுக்குப் பிறகு என் பண்ணைக்கு வருகிறேன். நான்காம் சுற்று விரைவில் வரவிருப்பதால், இயற்கையோடு இணைந்து புத்துணர்ச்சி பெறவும், மூச்சுவிடவும், வலிமையை வளர்த்துக் கொள்ளவும் இதுவே சரியான நேரம் உங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ள உமா சங்கரி, புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். நான்காம் கட்ட சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக, அவர் தனது தோட்டத்தில் இயற்கையோடு பொழுதைக் கழிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சுமித்ராவின் மகளான உமா சங்கரி, சீமான் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த 'வீர நடை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது தாயார் சுமித்ரா, 'பணக்காரன்' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தாயாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.