","image":["https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/29/b502fa49ec1023d5ed4f7f4b1d3d5ec317879921743631270_original.jpg"],"datePublished":"2026-08-29T08:29:46+00:00","dateModified":"2026-08-29T08:29:46+00:00","author":{"@type":"Organization","name":"Abp News"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/cinema/0bcdee389692"}}
PulseNews
சினிமா

King100 glimpse : நடிகர் நாகர்ஜூனாவின் 100 ஆவது படமான 'கிங்100' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். 67வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு சிறப்பு பரிசாக, அவரது 100வது திரைப்படமான “King100” படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இதனுடன் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அக்கினேனி குடும்பத்தின் திரையுலக வாரிசாக அறிமுகமான நாகார்ஜுனா, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனது பங்களிப்பை வழங்கி வரும் அவர், ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

1980களில் தொடங்கிய அவரது பயணம், ஆக்‌ஷன், காதல், குடும்பம், காமெடி என பல்வேறு வகை திரைப்படங்களைக் கடந்து சென்றுள்ளது. குறிப்பாக மணிரத்னம் இயக்கிய “கீதாஞ்சலி”, ராம் கோபால் வர்மாவின் “சிவா” போன்ற படங்கள் நாகார்ஜுனாவின் நடிப்புப் பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்தன. “அன்னமய்யா” உள்ளிட்ட படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம், நட்சத்திர அந்தஸ்தை தாண்டி நடிகராகவும் தனது திறமையை நிரூபித்தார்.

தற்போது 99 படங்களை நிறைவு செய்துள்ள நாகார்ஜுனா, தனது 100வது படத்தில் அடியெடுத்து வைக்கிறார். இதனால் “King100” திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிற்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் இயக்குநர் ரா கார்த்திக் இயக்கும் இப்படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகார்ஜுனா மற்றும் தபு இணைவதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம், நாகார்ஜுனாவின் 100வது படமாக அவரது நீண்ட திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கிய அத்தியாயமாக அமைய உள்ளது.

Make way for the KING 👑

He is here to REIGN with all his STYLE, SWAG & CHARISMA 🔥🔥#KING100 Birthday Glimpse OUT NOW 🤩🤩
▶️https://t.co/VtGabd40xA#LongLiveTheKing #HBDKingNagarjuna

King @iamnagarjuna @Rakarthik_dir @ThisIsDSP @rajamahadhevan @NavinNooli @ArtSathees... pic.twitter.com/Kwvmn4SQfj
— Annapurna Studios (@AnnapurnaStdios) August 29, 2026

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
King100 glimpse : நடிகர் நாகர்ஜூனாவின் 100 ஆவது படமான 'கிங்100' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது
PulseNews சுருக்கம்

தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தில் 100வது திரைப்படத்தை எட்டியுள்ளார். அவரது 67வது பிறந்தநாளை முன்னிட்டு, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக் குறிப்பு (க்ளிம்ப்ஸ்) தற்போது வெளியாகியுள்ளது.

இந்த 100வது படத்திற்கு 'கிங்100' என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகரின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema