PulseNews
சினிமா

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கடும் எதிர்ப்பு; இந்து அமைப்பினர் போராட்டத்தால் பதற்றம்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனிடையே நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் கர்நாடகாவின் தார்வாடில் உள்ள கர்நாடக வித்யாவர்தக சங்கம் சார்பாக, ‘மனிதநேயத்தை நோக்கிய உலக சமூகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, அந்த அரங்கத்திற்கு வெளியே பிரகாஷ் ராஜுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். அந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ், இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே பிரகாஷ் ராஜின் ஆதரவாளர்களும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே திரண்டு அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு, போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி, சிறு வாக்குவாதங்களுக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அதிரடியாகக் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கடும் எதிர்ப்பு; இந்து அமைப்பினர் போராட்டத்தால் பதற்றம்!
PulseNews சுருக்கம்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ், தனது நடிப்புத் துறையைத் தாண்டி அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், கர்நாடகாவின் தார்வாடில் உள்ள கர்நாடக வித்யாவர்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘மனிதநேயத்தை நோக்கிய உலக சமூகம்’ என்ற தலைப்பிலான நிகழ்வில் பங்கேற்க வந்த அவருக்கு, இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema