PulseNews
சினிமா

இரு கவிஞர்கள் எழுதிய ஒரே பாடல், எம்.ஜி.ஆர் படத்தில் சூப்பர் ஹிட்: இன்றைய பாடலை அன்றே கணித்த கண்ணதாசன்

கண்ணதாசன் பாடல்கள் எழுதிய விதம் குறித்து கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளாா, அதில், தமிழ் சினிமாவில் ஒருவர் பாடல் எழுத தொடங்கி ஏதே பிரச்னையால் பாதியில் விலக, மீதி பாடலை மற்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு மலைக்கள்ளன் படத்தில் வரும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலில், பல்லவி மட்டும் தஞ்சை ராமையாதாஸ் எழுதி இருப்பார். அதற்குப் பிறகு அவருக்கும் ஸ்ரீராமலு நாயுடுக்கும் பிரச்னை வந்து விடுகிறது. பாட்டை எழுதமாட்டேன் என்று சொல்லிப் போய்விடுகிறார். அதற்குப் பிறகு கோவை ஐயாமுத்துவைக் கொண்டு எழுத வைக்கிறார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார், நல்ல சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார், பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி, எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்று தஞ்சை ராமையாதாஸ் பொருளே திட்டுகிற மாதிரி எழுதுகிறார். இது குறை சொல்ற மாதிரியான பாட்டாக இருக்கும். அந்த பாட்டின் மீதி பாதியை எழுத வந்த கோவை ஐயாமுத்து, தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் என்று எழுதி பாடலின் பொருளே மாற்றி இருப்பார். கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம், கருத்தாக பல தொழில் பழகுவோம், ஊரில் கஞ்சிக்கில்லை என்னும் சொல்லை போக்குவோம். இந்த இரண்டு விஷயம் மாறுது அப்படியே வந்து பொருளே மாறிப் போயிருது. தஞ்சை ராமையாதாஸ் குறை சொல்லி பாடுவார். கோவை ஐயாமுத்து அந்த பாடலின் பொருளை மாற்றி இருப்பார். ஆனால் கவியரசர் கண்ணராசன் அப்படியால்ல, உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று பாரதி இருந்து அந்த பாடலை தொடர்ந்து எழுதிருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படியே எழுதுவது போல் எழுதி இருப்பார். காலைச் சுமை தாங்கி, போலே மார்வில் எனை தாங்கி, வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தனியும்டி என்று எழுதியிருப்பார். அதே மாதிரி திருவிளையாடல் படம் அவ்வையார் வந்து முருகனிடம் கேட்பார், அதாவது உங்களுக்கு வந்து கொடியது இனியது அறியது பெரியது இந்த நான்கு மட்டும் அவ்வையார் எழுதியது. புதியது என்பது அவ்வையார் எழுதவில்லை. கண்ணதாசர் எழுதியிருப்பார். ஆனால் அவ்வையார் இருந்து எப்படி எழுதுவாரோ அதே மாதிரி கண்ணதாசர் எழுதியிருப்பார். புதியது பாடல் என்றும், பிறகாலத்தில் பொருளே இல்லாமல் பாட்டு எழுதப்போறாங்க என்று அன்னைக்கே தெரிந்த கண்ணதாசன் எல்லா பாட்டு புதிதாக இருக்காது, பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அது அப்படியே இருக்கும் என்று எழுதி இருப்பார். ஆதிபராச் சக்தி படத்திலே வருகின்ற சொல்லடி அபிராமி பாடலை அப்படியே நீங்கள் வந்து அபிராம பட்டருடைய 50-வது கவிதை எடுத்து அப்படியே பயன்படுத்தியிருப்பார். காளி, பயங்கரி சூலி, மதாங்கனி கண்களில் தரிகின்றால் அவளுக்கு கண்கள் சிவந்துரு, வண்ணம் தரிகின்ற அந்த பாடலை அப்படியே பயன்படுத்தியிருப்பார். ஒருவர் எழுதிய பாடலை அப்படியே பின்பற்றி எழுதும்போது அவர்கள் மாதிரியே எழுதுகிற ஆற்றல் கண்ணதாசனிடம் இருக்கிறது அதுதான் கண்ணதாசன் வாழ் சிறப்பிப்பது சிறப்பது இதெல்லாம் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இரு கவிஞர்கள் எழுதிய ஒரே பாடல், எம்.ஜி.ஆர் படத்தில் சூப்பர் ஹிட்: இன்றைய பாடலை அன்றே கணித்த கண்ணதாசன்
PulseNews சுருக்கம்

மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற சூப்பர் ஹிட் பாடலை இரு வேறு கவிஞர்கள் இணைந்து எழுதியதாக கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். இப்பல்லவியை தஞ்சை ராமையாதாஸ் எழுதிய நிலையில், தயாரிப்பாளர் ஸ்ரீராமலு நாயுடுவுடனான கருத்து வேறுபாட்டினால் அவர் பாதியில் விலகினார்.

இதன் தொடர்ச்சியாக, எஞ்சிய வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது. திரைத்துறையில் ஒரு பாடல் பாதியில் நின்று மற்றவர்களால் பூர்த்தி செய்யப்படும் வழக்கத்திற்கு இப்பாடல் ஒரு உதாரணமாக திகழ்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema