PulseNews
சினிமா

தெலுங்கு நடிகரின் உணர்வுப்பூர்வமான பாராட்டு; நன்றி தெரிவித்த இயக்குநர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'டிசி'. இப்படம் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் கதை மற்றும் நடிப்பு என அனைத்து வகையிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. இப்படத்திற்குப் பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவும் இந்த படத்தை மனமாரப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில், ”டிசி எவ்வளவு புதுமையான மற்றும் மிகச் சிறப்பான படம். இந்த படம் மிகவும் அருமை. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் மிகவும் ரசித்தேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, இப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவி, “மிக்க நன்றி சார். இது எனக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் டிசி படத்தைப் பார்த்துப் பாராட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், சிறப்பான உணர்வையும் அளிக்கிறது. உங்கள் அன்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தெலுங்கு நடிகரின் உணர்வுப்பூர்வமான பாராட்டு; நன்றி தெரிவித்த இயக்குநர்
PulseNews சுருக்கம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த 'டிசி' திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் கதைக்களம் மற்றும் நடிப்பு என அனைத்து அம்சங்களும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகின்றன.

இந்த வரிசையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, இப்படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த உணர்வுப்பூர்வமான பாராட்டுக்கு இயக்குநர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema