PulseNews
சினிமா

CM விஜய்யின் அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ! கூட்டணிக்கு செக் வைக்க திட்டம்.... அதிரும் அரசியல் களம்!!!

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் தலையீட்டை குறைத்து, ஆட்சியிலும் கொள்கை முடிவுகளிலும் சுதந்திரமாக செயல்பட முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்காக காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை விரைவாக நடத்தி வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை தற்போது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி அழுத்தத்தை குறைக்க முயற்சி தற்போதைய ஆட்சி நிர்வாகத்தில் கூட்டணி கட்சிகளின் அழுத்தமும், கொள்கை முடிவுகளில் அவர்களின் தலையீடும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், சட்டமன்றத்தில் தேவையான எண்ணிக்கையைப் பெற்று தனிப்பெரும்பான்மை அடைவதன் மூலம் முக்கிய முடிவுகளை தடையின்றி எடுக்க முடியும் என விஜய் தரப்பு கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் படிங்க: எங்ககிட்டையே உங்க வேலையை காட்டுறீங்களா? தவெகவை மிரட்டிய காங்கிரஸுக்கு முதல்வர் விஜய் வைத்த செக்..!!! 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு நீதிமன்றத் தடை இதற்கிடையே காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி தேர்தலை விரைவாக நடத்துவதில் அரசுக்கு சட்டரீதியான தடைகள் ஏற்பட்டுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகே அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியும். அடுத்தகட்ட நகர்வு என்ன இடைத்தேர்தலை நடத்துவதற்கான சட்டப் போராட்டம் ஒருபுறம் தொடரும் நிலையில், மறுபுறம் கூட்டணி கட்சிகளுடனான அரசியல் உறவும் கவனிக்கப்படும் விஷயமாகியுள்ளது. நீதிமன்றத் தடை நீங்கி தேர்தல் நடத்தப்பட்டால், அதில் கிடைக்கும் முடிவுகள் ஆட்சியின் பலத்தையும் கூட்டணி அரசியலின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதையும் படிங்க: பெரிய சிக்கலில் சிக்கிய CM விஜய்...! விஜய்க்கு எதிராக தீர்ப்பு வந்தால் முதல்வர் பதவிக்கே ஆப்பு? அடுத்த முதலமைச்சர் யார்? புயலைக் கிளப்பும் புது வழக்கு...!!!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
CM விஜய்யின் அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ! கூட்டணிக்கு செக் வைக்க திட்டம்.... அதிரும் அரசியல் களம்!!!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, கொள்கை முடிவுகளில் சுதந்திரமாகச் செயல்பட முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக காலியாகவுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் விரைவாக இடைத்தேர்தலை நடத்தி வெற்றி பெற அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

இருப்பினும், இந்தத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை அரசுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனால் கூட்டணி அழுத்தத்திலிருந்து விடுபட்டு ஆட்சியைத் தனித்து வழிநடத்தும் அவரது திட்டத்திற்குத் தற்போதைய சூழலில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema