பில்டப், வன்முறை, பாலியல்... இது மட்டும் போதுமா? - ‘டாக்ஸிக்’ விமர்சனம்!
கே ஜி எஃப் இரண்டு பாகங்கள் கொடுத்த மிகப்பிரமாண்டமான வெற்றிகளுக்கு பிறகு நடிகர் யஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் திரைப்படம் டாக்ஸிக். கே ஜி எஃப் படங்கள் போன்றே மிகுந்த வன்முறை நிறைந்த மாஸ் மசாலா நிறைந்த பிரம்மாண்ட கமர்சியல் ஃபேன் இந்திய படமாக இந்த படம் உருவாகி இருந்ததால் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்ததா, இல்லையா? 1940களில் நாயகன் யஷ் மற்றும் அக்கா நயன்தாரா ஆகியோர் கோவாவில் இருக்கும் சால்விடார் என்ற மிகப்பெரிய கேங்ஸ்டரிடம் அடியாட்களாக வேலை செய்கின்றனர். அப்பொழுது கோவாவை போர்ச்சுகீசியர்கள் ஆண்டு வருகின்றனர். இவர்களுக்கிடையே போதை மருந்துகள் கடத்தல்கள் மற்றும் சூதாட்டங்கள் என பல்வேறு விதமான தேச விரோத செயல்கள் புழங்கி அதன் மூலம் பணம் கொழிக்கிறது. சால்விடாரின் மனைவி ஷுமா குரேஷி தன் தம்பியுடன் சேர்ந்து கொண்டு சேல்விடாரின் சாம்ராஜ்ஜியத்தை தந்திரமாக கைப்பற்ற நினைக்கிறார். அந்த திட்டத்தை தவுடுபடியாக்குகிறார் நாயகன் யஷ். இதனால் யஷ்ஷை பழி தீர்க்க அவரின் காதலியான நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் கியாரா அத்வானி கையால் நயன்தாராவை கொன்றுவிடுகிறார். இந்த விஷயம் அறிந்த யஷ் கோவாவுக்கு கொலை வெறியுடன் வருகிறார். வந்த இடத்தில் கியாரா அத்வானி தன் மகனை யஷ்ஷிடம் விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான யஷ் தன் மகனை சந்தர்ப்ப சூழ்நிலையால் தண்ணிக்குள் மூழ்கடிக்கிறார். இதனால் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் யஷ் அதிலிருந்து விடுபட பல்வேறு யுக்திகளை மற்றும் வன்முறை பாலியல் நிறைந்த விஷயங்களில் ஈடுபடுகிறார். அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து அவர் மீண்டு அதை வீழ்த்தினாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. மிகவும் ஒரு சுமாரான கதையை எடுத்துக்கொண்டு அதை மிகவும் கற்பனை மிகுந்த நினைத்துக் கூட பார்க்க முடியாத பிரம்மாண்ட கதையாக உருவாக்கி அதனுள் வன்முறையும் பாலியலும் அதிகமாக நிறைந்த படியான படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கீது மோகன் தாஸ். படம் ஆரம்பித்து மிக பிரம்மாண்டமாக ஓப்பனாகி போக போக ஒரு மிகப்பெரிய விண்டேஜ் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை இப்படம் கொடுத்திருக்கிறது. அதேபோல் காட்சிகளும் உருவாக்கமும் இசையும் மிக மிக உலகத்தரம் வாய்ந்ததாக இருந்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு இது மட்டுமே ஒரு பிளஸ். மற்றபடி படத்தில் கதையாக ஒன்றுமில்லை. அதேபோல் வன்முறைகள் அதிகம். பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம். முக்கியமாக பார்ப்பவர்களுக்கு இந்த படத்தின் கதை புரிவது என்பது மிக மிகக் கடினம். கே ஜி எஃப் படத்திலிருந்து நாயகன் யஷ்ஷை இந்த கதைக்குள் தூக்கிக் கொண்டு வந்து போட்டது போல் அவர் அந்த படத்தில் இருந்த ஹேங்கோவரலிருந்து வெளியே வராமல் அவர் அப்படியேதான் பெரும் கேங்ஸ்டர் ஆக வாழ்ந்து வருகிறார். மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் மிகவும் சுயநலவாதியான டாக்ஸிக் நிறைந்த மனிதராக அவர் செய்யும் செயல்கள் ஆரம்பத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் போகப் போக மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது. குறிப்பாக படத்தின் முதல் பாதி கூட ஏதோ பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் இரண்டாம் பாதியில் இருந்து படம் சுத்தமாக நகரவில்லை. பல இடங்களில் வேகத்தடைகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக இரண்டாவது யஷ் வரும் காட்சியிலிருந்து படம் மிக மிக அயற்சி. இதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட மூன்றேகால் மணி நேரம் படத்தை பார்த்து முடிப்பது என்பது மிகப்பெரிய டாஸ்காக அமைந்திருக்கிறது. படத்தின் மேக்கிங்க்கும் இசைக்கும் பிரம்மாண்டத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்த இயக்குநர் சற்று கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை எடுத்திருந்தால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி திரைப்படம் ஆக கிட்டத்தட்ட கேஜிஎப் போல் மற்றொரு திரைப்படமாக இந்த திரைப்படம் மாற மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை படக்குழுவினர் தவற விட்டுள்ளனர். நடிகர் யஷ் வழக்கம் போல் கேஜிஎப் படத்தில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்தில் செய்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் பில்டப்புகள் மற்றும் மாஸ் காட்சிகள் தெரிகிறது. அவரது ரசிகர்கள் கைத்தட்டல்களாலும் விசில்களாலும் திரையரங்கை அதர செய்கின்றனர். மற்றபடி அவர் செய்கின்ற செயல்களும் படத்திற்கும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. சொல்லப்போனால் கதைக்கும் பெரிதாக ஒட்டவில்லை. ஒரு கற்பனை உலகத்திற்கு சென்று வருவது போல் மட்டுமே இருக்கிறது. அக்காவாக வரும் நயன்தாரா மிகவும் வயதானவர் போல் தெரிகிறார். ஆக்ஷன் காட்சிகளில் மின்னி இருக்கிறார். வழக்கமான அக்காவாக வந்து செல்கிறார். படத்தில் இன்னொரு ஆறுதல் நாயகி கியாரா அத்வானி. அவர் வரும் காட்சிகள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இவ்வளவு ரத்த கலரிக்கு மத்தியில் ஒரு அழகான தேவதையாக தெரிகிறார். மற்றொரு நாயகி ஹுமா குரேஷி கொடுத்த வேலையை வில்லத்தனம் காட்டி செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் ருக்மணி வசந்த் வர வேண்டுமே என்ற காரணத்துக்காகவே கொண்டு வந்து அவருக்கான வேலையை செவ்வன செய்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றொரு நாயகி தாரா வெறும் குடிப்பதும் கூத்தடிப்பதுமாகவே படம் முழுவதும் இருக்கிறார். அதை மட்டுமே செய்துவிட்டு இறந்து விடுகிறார். மற்றபடி படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் அவரவர் வேலை நிறைவாக செய்து இருக்கின்றனர். ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தன்ஷித் ஆகியோரது இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. கேஜிஎப் திரைப்படத்தில் எந்த அளவு பின்னணி இசை நாம் ரசித்தோமோ அதே போல் இந்த படத்திலும் பின்னணி இசை அமைந்திருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் சிறப்பு. மற்றபடி இன்னும் கூட மனதை வருடும்படியான இசை தேவைப்படுகிறது. ராஜீவ் ரவி ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக பிரம்மாண்டம். ஒரு மிகப் பெரிய உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை இவரது ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளும் அதற்கேற்றார் போல் அமைந்து படத்திற்கு வலு சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பு. இவருக்கு விருதுகள் நிச்சயம். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு கிட்டத்தட்ட தூள் படத்தில் வரும் பறவை முனியம்மா வசனம் போல் "இந்த கருமத்தை தான் நைட்டு ஃபுல்லா வச்சு வெட்டிக்கிட்டு இருந்தீங்க"என அசால்டாக விவேக் உடற்பயிற்சி செய்யும் சாதனங்களை எட்டி உதைத்து விட்டு சென்று விடுவார். அதுபோல் இந்த கதையை வாடா இத்தனை நாள் போட்டு செதுக்கிகிட்டு இருந்தீங்க என கேட்க தூண்டுவது போல் படம் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில் உருவாகி இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. படத்தில் கதையாக பெரிதாக ஒன்றும் இல்லாததும் அதற்கேற்றார் போல் திரைக்கதையும் விறுவிறுப்பாக இல்லாததும் படத்தின் நீளமும் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடுவதும் படத்திற்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்திருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை சிறப்பான முறையில் கேஜிஎப் போல் பிரம்மாண்டமாகவும் மிக மிக கமர்சியல் நிறைந்த மாஸ் மசாலா படமாகவும் இப்படத்தை சிறப்பான திரைக்கதையோடு கொடுத்திருந்தால் இந்தாண்டில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக இந்த டாக்சிக் மாறி இருக்கும். அதை தவற விட்டிருப்பது மிகப்பெரிய டிசாஸ்டர் ஆக மாறி இருக்கிறது. டாக்சிக் - டிசாஸ்டர்!

கே.ஜி.எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் யஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. கே.ஜி.எஃப் பாணியிலேயே வன்முறை மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்த பான்-இந்தியா திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
1940-களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு கோவாவில் கதையை அமைத்திருக்கும் இப்படத்தில், யஷ் மற்றும் அவரது அக்காவாக நயன்தாரா நடித்துள்ளனர். படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதே தற்போதைய விமர்சனமாக எழுந்துள்ளது.