PulseNews
சினிமா

“எதுவுமே இல்லாமல் இருக்கலாம், ஆனால்...” - மமிதா பைஜூவின் வளர்ச்சி குறித்து சூர்யா!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்திருக்க மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் சூர்யா, மமிதா பைஜூ, வெங்கி அட்லூரி உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டனர். மேலும் தங்களது பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் சூர்யா பேசும் போது மமிதா பைஜூ குறித்து ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் பேசியதாவது, “நான் ஏற்கனவே இதை சொல்லியிருக்கிறேன். நீங்கள் வாழ்க்கையை தொடங்கும் போது உங்களிடம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அது பணம், குடும்ப பின்னணி எதுவாகக்கூட இருக்கலாம், ஏன் திறமைக்கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களை நீங்கள் முழுமையாக நம்பினால் இந்த இடத்திற்கு வரலாம். அதைத்தான் மமிதா பைஜூ செய்திருக்கிறார். ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய குழந்தை பருவத்தில் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த மேடையில் செண்டராக நின்றுக் கொண்டிருக்கிறார். அதனால் நம்பிக்கை வையுங்கள் வாழ்க்கை நிச்சம் அழகாக மாறும்” என்றார்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“எதுவுமே இல்லாமல் இருக்கலாம், ஆனால்...” - மமிதா பைஜூவின் வளர்ச்சி குறித்து சூர்யா!
PulseNews சுருக்கம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில், மமிதா பைஜூவின் நடிப்புத் திறன் மற்றும் வளர்ச்சி குறித்து சூர்யா பாராட்டிப் பேசியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema