PulseNews
சினிமா

ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்

கடந்த ஆண்டு வெளியான ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் பெண்ணியவாதிகளிடம் தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த படத்தின் தாக்கத்தால் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த காதலனை பெண் ஒருவர் பிரேக் அப் செய்துள்ளது தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ரியோராஜ் , மாளவிகா மனோஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்த படத்தில் பெண்ணிய கருத்துக்களை பேசும் பெண்களை விமர்சிக்கும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. போலி பெண்ணியவாதிகளையே இப்படம் விமர்சிப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டாலும் இப்படம் ஆணாதிக்க மனநிலையை பிரதிபலிப்பதாக பலரும் கூறி வந்தனர். சமீபத்தில் இப்படம் குறித்து நடிகர் ரியோ ராஜ் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரெடிட்டில் பெண் ஒருவர் இந்த படத்தால் தான் 7 வருடங்களாக காதலித்து வந்த காதலனை பிரேக் அப் செய்ததாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது

கம்பேர் செய்த காதலன்

அந்த பெண்ணின் தனது பதிவில் தான் 15 வயதில் இருந்து 7 வருடங்களாக ஒருவரை காதலித்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால் காலப்போக்கில் இரண்டு பேரும் நிறைய வேறுபட்டுப் போனதாகவும் இருவருக்குமிடையில் மனக்கசப்பு அதிகரித்ததாகவும் கூறியுள்ளார். ஒருவரை ஒருவர் கொலை செய்துவிடுவோமோ என்று அஞ்சும் அளவிற்கு இருவரிடையில் வெறுப்பு உருவாகியுள்ளது.  ஆனாலும் இருவரும் ஒருவரின் துணையை இன்னொருவர் நாடியதால் தங்களது காதலை தொடர்ந்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில ஆண் பாவம் பொல்லாதது படம் வெளியானதற்குப் பிறகு பிரச்சனை இன்னும் மோசமாகியிருக்கிறது. அந்தப் படம் அந்தப் பெண்ணிற்கு கோபத்தை தூண்டியுள்ளது. ஆனால் பெண்ணின் காதலன் அந்தப் படத்தையே அவர்களின் காதல் உறவிற்கான template ஆக பயண்படுத்த ஆரம்பித்திருக்கார்.  Consent, தனது விருப்பம் பற்றி அந்த பெண் ஏதாவது பேசினாலே, அந்தப் படத்தில் வரும் self respect dialogue எடுத்துட்டு வந்திருக்கார்.

பிரேக் அப் செய்த பெண்

அதற்கு மேல், அந்தப் படத்தில் மாளவிகாவின் கதாபாத்திரத்தை வைத்து அவளை கம்பேர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனை அந்த பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் , என்னை அந்த கேரக்டர் கூட ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்கவில்லை அறிவில்லாத பெண்ணாக நீ பார்க்குற மாதிரி இருக்கு. உண்மையிலேயே நம்ம இரண்டு பேரில் நான்தான் பொறுப்பாகவும் , சில விஷயங்கள்ல ஸ்மார்ட்டாகவும் இருக்கேன் என்று அந்த பெண் சொல்லியிருக்கார். ஆனால் அவனோ அதையும் புரிந்துகொள்ளாமல், ஆண்கள் தான் பாவம் என்று சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். கடைசியில் அந்தப் பெண் தங்களது 7 ஆண்டுகால காதலை பிரேக் அப் செய்துகொண்டுள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்
PulseNews சுருக்கம்

கடந்த ஆண்டு வெளியான 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம் பெண்ணியவாதிகளிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான இப்படத்தில், பெண்ணியக் கருத்துகளைப் பேசும் பெண்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்தத் திரைப்படத்தின் தாக்கத்தால், ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்த காதலனைப் பெண் ஒருவர் பிரிந்து சென்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இப்படம் தொடர்பான காட்சிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema