பிரபல ஹாலிவுட் நடிகருக்கு வலை வீச்சு; பிரம்மாண்டத் திட்டத்தில் அட்லீ!
இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜூனை வைத்து ‘ராக்கா’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து வருகிறார். இவரைத் தவிர்த்து மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக ராஷ்மிகா நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக சொல்கிறார்கள். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சைன்ஸ் பிக்சன் மற்றும் ஃபேண்டஸி கலந்த ஜானரில் உருவாகுவதாகச் சொல்லப்படும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்பது மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. முதலில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் படக்குழு தரப்பில் அதை உறுதி செய்யவில்லை. பின்பு ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாகத் தகவல் உலா வந்தது. இது குறித்தும் படக்குழு எந்த விளக்கஉம் அளிக்கவில்லை. ஆனால் இவர் நடிக்கவில்லை எனத் திரை வட்டாரங்கள் தெரிவித்தனர். இதன் வரிசையில் புதிதாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிக்கவுள்ளதாக தற்போது லேட்டஸ் தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் வில் ஸ்மித் முதன் முறையாக தென்னிந்திய சினிமாவில் நடிப்பார். இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்த அவர் 2019ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி யேர்’ படத்தில் கேமியோவாக நடித்திருந்தார். இதுதான் அவரது முதல் இந்திய சினிமா படம் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கா படத்தை பான் வேர்ல்ட் படமாக மாற்றும் பிரம்மாண்ட திட்டத்தில் வில் ஸ்மித்தை இதில் கொண்டு வர அவர் முயற்சி எடுத்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.

இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ என்ற பிரம்மாண்டத் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
அறிவியல் புனைவு மற்றும் ஃபேண்டஸி பாணியில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதில் ராஷ்மிகா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.