எங்களுக்கு சூடு, சுரணை இருக்கு, அந்த மாதிரி பாட முடியாது; டைரக்டரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி
திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பலரும் தற்போது வெளியில் பேசி வரும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி சுனிதா சாரதி, ஒரு பாடலை தான் பாடும்போது படத்தின் இயக்குனர் பல ஆண்களுக்கு முன்னிலையில் தன்னை மூட்-ஆக பாட சொன்னதாக கூறியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியாக ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் இனி நானும் நானில்லை என்ற பாடல் மூலம் திரைத்துறையில் பாடகியாக அறிமுகமானவர் சுனிதா சாரதி. தொடர்ந்து காக்க காக்க, பாய்ஸ், ஆயுத எழுத்து, காதல், நியூ, சச்சின், உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். ‘கண்ணிலே கல்மிஷம்’, ‘என்னோடு நீ இருந்தால்’, ‘சுத்துதோ சுத்துதோ பூமி’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘யாக்கை திரி’ உள்ளிட்ட பல்வேறு பிரபல பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல் பாடியுள்ள சுனிதா சாரதி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பாடல் பாடும்போது தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் சேனலில் பேசிய அவர், தான் ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பாடலை, அந்த மாதிரி "மூட்" (MOOD) ஆகப் பாட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதாகவும், அங்கு முழுக்க ஆண்கள் மட்டுமே இருந்த அந்தச் சூழல் தனக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அது கொஞ்சம் செக்ஸியாக பாடல். அந்த பாடலை பாடும்போது இயக்குனர் வந்து நீங்கள் மூடாக இருந்தால் எப்படி பாடுவீங்களோ அப்படி பாடுங்கள் என்று சொன்னார். அந்த இடத்தில் பெண்கள் யாரும் இல்லை. அனைவரும் ஆண்கள் தான். அப்போது நான் அந்த மாதிரி மூட் எனக்கு வராது. அது என்ன மூடா பாட வேண்டும்? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆர்டிஸ்ட் என்றால் எங்களுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாதா? இதேபோல், ஒரு இடத்தில் அல்லது ஒரு சிங்கிள் சீட்டில் அமர்ந்திருக்கும்போது, அருகில் வந்து ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்வார்கள். இது கேவலமாக இல்லையா? சின்மயிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் உருவாக்கிய விழிப்புணர்வு தான் ஆண்கள் இப்போது பயப்படுகிறார்கள். முன்பு இந்த மாதிரி இல்லை. எல்லோரும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. எது செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் உள்ளுக்குள் அதைப்பற்றிய கோபம் நமக்கு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

திரையுலகில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்துப் பேசி வரும் சூழலில், பிரபல பின்னணிப் பாடகி சுனிதா சாரதி தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். தான் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் படத்தின் இயக்குனர் தன்னை பல ஆண்களுக்கு முன்னிலையில் வைத்துக்கொண்டு, உணர்ச்சிகரமாக (mood-ஆக) பாடுமாறு வற்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுனிதா சாரதி, தனக்கு தன்மானம் இருப்பதாகவும், அந்த வகையில் தன்னால் பாட முடியாது என்றும் இயக்குனரை கடுமையாகச் சாடியுள்ளார். 2002-ம் ஆண்டு 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தின் மூலம் அறிமுகமான இவர், காக்க காக்க, பாய்ஸ், ஆயுத எழுத்து, காதல் மற்றும் நியூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.