மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”...நடிகை அனிஷ்மா அனில்குமார்!
‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள...
‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ள இளம் நடிகை அனிஷ்மா அனில்குமார், தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வருகிறார். ஒரே விதமான பாத்திரங்களில் நடிக்க விரும்பாமல், வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர் கவனம் ஈர்த்து வருகிறார்.
தற்போது அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் அன்பும் பலவிதமான உணர்வுகளும் நிறைந்த ஒன்றாக இருப்பதாக அனிஷ்மா அனில்குமார் தெரிவித்துள்ளார்.