PulseNews
சினிமா

தோல்விக்கு பின் தரமான கம்பேக் கொடுக்க ரெடியான ஷங்கர் - முருகதாஸ் கூட்டணி? ஒரே படத்தில் இணையும் முன்னணி இயக்குநர்கள்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்குவதில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் ஷங்கர். அதேபோல், ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் கதைகளை விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெயர் பெற்றவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், தமிழ் சினிமாவின் இந்த இரு முன்னணி இயக்குநர்களும் ஒரே திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இதற்கு முன்னதாக சல்மான் கான் நடிப்பில் அவர் இயக்கிய ‘சிகந்தர்’ திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அடுத்த படத்தின் மூலம் வலுவான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் முருகதாஸ் இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம், பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர் பெற்ற ஷங்கரின் சமீபத்திய திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அதன் தொடர்ச்சியான ‘இந்தியன் 3’ மீதான எதிர்பார்ப்பும் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்படியான சூழலில்தான் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் பரவி வரும் தகவலின்படி, முருகதாஸ் கதை எழுத, ஷங்கர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இருவரின் திரைப்பயணத்திலும் இது மிகவும் வித்தியாசமான கூட்டணியாக அமையும். முருகதாஸின் விறுவிறுப்பான கதை, ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் ஷங்கரின் பிரம்மாண்டமான மேக்கிங் இணைந்தால் படம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே உருவாகியுள்ளது. எனினும், இந்தப் படத்தில் நடிக்க உள்ள ஹீரோ யார், எந்த நிறுவனம் தயாரிக்கிறது, படத்தின் பட்ஜெட் என்ன, படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது உள்ளிட்ட எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதேபோல், ஷங்கர்–முருகதாஸ் கூட்டணி குறித்த தகவலையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி இயக்குநர்களும் ஒரே படத்திற்காக இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே மிகப்பெரிய கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தோல்விக்கு பின் தரமான கம்பேக் கொடுக்க ரெடியான ஷங்கர் - முருகதாஸ் கூட்டணி? ஒரே படத்தில் இணையும் முன்னணி இயக்குநர்கள்!
PulseNews சுருக்கம்

பிரமாண்டமான படங்களுக்குப் பெயர் பெற்ற ஷங்கரும், விறுவிறுப்பான ஆக்‌ஷன் கதைகளைத் தருவதில் வல்லவரான ஏ.ஆர். முருகதாஸும் ஒரு புதிய திரைப்படத்திற்காக ஒன்றிணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'மதராஸி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தத் தோல்விக்குப் பிறகு, இருவரும் இணைந்து தரமான மீள்வருகையை (கம்பேக்) கொடுக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema