PulseNews
சினிமா

கார்த்திக்காக தர்ணாவில் களமிறங்கிய ரேவதி, அடித்து விரட்ட சொன்ன சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் அப்டேட்

ஜீவா மீது மலரும் காதல்... காதல் பயணத்தை நோக்கி நகரும் மீனாட்சி! | வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் வாகை சூடவா சீரியல் தினந்தோறும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில் சிவா மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு வந்திருந்த நிலையில், இன்று பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேற உள்ளன. கல்லூரிக்குச் சென்ற மீனாட்சி மற்றும் சிவா, அங்கு பேராசிரியராக பணியாற்றி வரும் ஜீவாவின் நெருங்கிய நண்பரை சந்திக்கின்றனர். அப்போது, "இவனுடன் நண்பராக இருந்த நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறீர்கள்?" என்று மீனாட்சி ஜாலியாக கேட்க, ஜீவா அவரது வாழ்க்கையில் செய்த உதவிகள் குறித்து பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் கல்விக் கட்டணத்தையும் ஜீவாவே ரகசியமாக செலுத்தியிருப்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல், "ஜீவா அண்ணா பல பேருக்கு உதவி செய்திருக்கிறார்... ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் வெளியே சொல்ல மாட்டார்" என்று அந்த மாணவி கூற, மீனாட்சியின் மனதில் ஜீவாவைப் பற்றிய பார்வை முற்றிலும் மாறுகிறது. வீட்டில் அனைவராலும் "வெட்டிப் பையன்" என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் ஜீவா, உண்மையில் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒளியாக இருக்கிறார் என்பதை அறிந்த மீனாட்சி, அவர்மீது தனி மரியாதையும் ஈர்ப்பும் கொள்ள தொடங்குகிறாள். இந்த நட்பு காதலாக மலரப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரிக்கிறது. மறுபக்கம், வீட்டில் பணத்தை மாற்றி வைத்த மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பத்தா உறுதியான முடிவெடுக்கிறார். தேவியுடன் சேர்ந்து அவர் ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்துகிறார். வீட்டின் வாசலில் சூடத்தை ஏற்றி வைத்து, "நான் பணத்தை எடுக்கவில்லை" என்று ஒவ்வொருவரும் சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். இந்த எதிர்பாராத சோதனையில் உண்மை வெளிவருமா? குற்றவாளி சிக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தர்ணாவில் களமிறங்கிய ரேவதி.. அதிரடியாக ரிலீஸ் செய்யப்பட்ட கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று செம ட்விஸ்ட்!* கார்த்திகை தீபம் சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. நேற்றைய எபிசோடில், கார்த்திக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ரேவதி துணிச்சலாக தர்ணா போராட்டத்தில் இறங்கிய நிலையில், இன்றைய எபிசோட் மேலும் பல அதிரடி திருப்பங்களை கொண்டு வர உள்ளது. இன்றைய எபிசோடில், ரேவதியின் போராட்டம் குறித்து சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவுக்கு தகவல் கிடைக்கிறது. அதே நேரத்தில், கார்த்திக்காக நீதிக்கேட்டு ஊர் மக்களும் ரேவதிக்கு ஆதரவாக ஒன்றிணைவதால் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் திணறும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் ஆலோசனை கேட்க, அவர் கோபத்தின் உச்சத்தில், “பணத்தை கொடுக்கிறேன்... எல்லோரையும் அடிச்சு துரத்த சொல்லு!” என உத்தரவிடுகிறார். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள்மீதும் ரேவதியின்மீதும் தடியடி நடத்த, அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஆனால் அதிரடி அங்கேயே முடிவதில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்து வரும் மீடியாவிடம் ரேவதி நடந்த அனைத்தையும் வெளிப்படையாக கூறுகிறாள். இதனால் விவகாரம் பெரிதாக வெடிக்க, நேரடியாக அங்கு வருகிறார் எஸ்.பி. கார்த்திக்கை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்தீர்கள்?” என்று இன்ஸ்பெக்டரிடம் எஸ்.பி. சரமாரியாக கேள்வி எழுப்புகிறார். பதில் சொல்ல முடியாமல் திணறும் இன்ஸ்பெக்டர், இறுதியில் வேறு வழியின்றி கார்த்திக்கை விடுதலை செய்ய நேரிடுகிறது. கார்த்திக் விடுதலையானதும், ஆவேசத்திலும் உறுதியிலும் இருக்கும் ரேவதி நேராக சாமுண்டீஸ்வரியின் வீட்டை நோக்கி புறப்படுகிறாள். அங்கு என்ன நடக்கப் போகிறது? சாமுண்டீஸ்வரியை நேருக்கு நேர் சந்தித்து ரேவதி என்ன செய்யப் போகிறாள்? கார்த்திக்கின் அடுத்த முடிவு என்ன? அதிரடி மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இன்றைய எபிசோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைனிங் டேபிளில் அமர்ந்த கர்ணா.. இந்துவின் சவால் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை.. உடைக்கப்பட்ட நாற்காலியின் பின்னணி என்ன? - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்! சின்னஞ்சிறு கிளியே நேற்றைய எபிசோடில் இந்து, கிருபா மற்றும் திவாகரனை வெறுப்பேற்ற அடுத்தடுத்து திட்டம் தீட்டிய நிலையில், இன்று குடும்ப உறவுகளை சோதிக்கும் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.அதாவது, கையில் காயம் ஏற்பட்டது போல நாடகம் போடும் இந்து, "இப்போது துணிகளைக் கூட காய வைக்க முடியலையே" என்று வருத்தப்படுகிறாள். உடனே கர்ணா, அதுக்குத்தான் நான் இருக்கேன்ல, வா நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி இந்துவின் துணிகளை பால்கனியில் காய வைக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் கிருபாவும் திவாகரனும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர. அந்த நேரத்தில் அங்கு வரும் கிருபாவும் திவாகரனும் கர்ணா இந்துவுக்கு உதவி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். "நீ எதற்காக இந்த வேலை எல்லாம் செய்யற?" என்று கேட்க, கர்ணா, "அவளுக்கு கையில அடிபட்டிருக்கு. நமக்காக எவ்வளவு வேலை செய்யுறா.. நான் இதைக்கூட செய்யக்கூடாதா?" என்று பதிலடி கொடுத்து அவர்களை அமைதியாக்குகிறான். இதையடுத்து இந்து அடுத்த திட்டத்தை கையில் எடுக்கிறாள். கர்ணாவிடம், "உங்க அண்ணன்கள் உன் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்காங்கன்னு பார்க்கலாமா?" என்று சவால் விடுகிறாள். அதன்படி, இதுவரை தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு வந்த கர்ணா, மறுநாள் தனது அண்ணன்களுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று கூறுகிறாள். அண்ணன்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கர்ணாவும் சவாலை ஏற்றுக்கொள்கிறான். மறுநாள் காலை, கர்ணா தைரியமாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடத் தொடங்குகிறான். இதைப் பார்த்த கிருபாவும் திவாகரனும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். இருப்பினும் கிருபா, "நீ சந்தோஷமா சாப்பிடு" என்று அரை மனதோடு கூற, அந்த சூழ்நிலை மேலும் கனமாக மாறுகிறது. ஆனால் உண்மையான பரபரப்பு அதற்குப் பிறகுதான் நடக்கிறது. கர்ணா வேலை விஷயமாக வெளியே சென்றதும், கிருபா விஷ்வாவை அழைத்து கர்ணா அமர்ந்திருந்த நாற்காலியை எடுத்து வரச் சொல்கிறான். பிறகு அனைவரும் பார்க்கும் முன்பே அந்த நாற்காலியை தூக்கிப்போட்டு உடைத்து விடுகிறான். இந்த காட்சியை பார்த்த இந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். அப்போது கர்ணாவும் அங்கே வந்துவிட, நிலைமையை சமாளிக்க முயலும் கிருபா, "இந்த நாற்காலி ரொம்ப நாளாக ஆடிட்டு இருந்தது. அது வீட்டுக்கு அபசகுணம் என்பதால்தான் உடைத்தேன்" என்று காரணம் சொல்கிறான். ஆனால் இந்து அதை ஏற்காமல், கர்ணா அதில் உட்கார்ந்ததால்தான் அந்த சேரை உடைத்ததாக சொல்ல, கர்ணா தனது அண்ணன்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்று உறுதியாக நம்பி இந்துவின் பேச்சை ஏற்க மறுக்கிறான். கர்ணாவுக்கு உண்மை தெரிய வருமா? கிருபாவின் உண்மையான மனநிலை வெளிச்சத்திற்கு வருமா?* என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கார்த்திக்காக தர்ணாவில் களமிறங்கிய ரேவதி, அடித்து விரட்ட சொன்ன சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் அப்டேட்
PulseNews சுருக்கம்

கார்த்திக்கை விடுவிக்கக் கோரி ரேவதி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவரை அங்கிருந்து அடித்து விரட்டுமாறு சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார், இது 'கார்த்திகை தீபம்' தொடரின் இன்றைய விறுவிறுப்பான திருப்பமாகும்.

இதனிடையே 'வாகை சூடவா' தொடரில், சிவா மற்றும் மீனாட்சி கல்லூரிக்குச் சென்று ஜீவாவின் நெருங்கிய நண்பரைச் சந்திக்கின்றனர். ஜீவா மீது மீனாட்சிக்கு மலரும் காதலும், அவர்களின் காதல் பயணமும் இந்த எபிசோடில் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இடம்பெறுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema