“என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் தான்” - சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (28-07-26) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் வைத்த கேள்விகளுக்கு இன்று அத்துறைகளின் அமைச்சர்களின் பதிலுரை வழங்கி அறிவிப்புகளை வெளியிட்டனர். அந்த வகையில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது அவர், “இந்த தேர்தல் களத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எனக்காகப் பேசி என்னுடைய வெற்றி முக்கியமான நபர் என்றால் அவர் தான். நாங்கள் நன்றிகளைச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் திமுகவினர், எங்களுடைய தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொன்னதாகத் தெரியவில்லை. நன்றி இருவருக்கும் பொதுவானது தான். நாங்களும் உங்களுக்காக பாராட்டியிருக்கிறோம், நீங்களும் எங்களுக்காக பாராட்டியிருக்கிறீர்கள். இரண்டு பக்கமும் வாக்குகள் தான் இருக்கிறது, இரண்டு பேருடைய உழைப்பும் இருக்கிறது. ஆனால் இதுவரை நீங்கள் நன்றி கூறவில்லை. நாங்கள் நன்றிக்குரியவர்கள் என்பதை இந்த அவையில் சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார். அப்போது திடீரென எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் வன்னி அரசு எல்லோருக்கும் நன்றி சொன்னார், எனக்கும் நன்றி சொன்னார். எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவனுக்கும் இடையே இருப்பது தேர்தல் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியாகவும் தேர்தலுக்கு பிறகு ஒரு கூட்டணியாகவும் மாறும் கூட்டணி கிடையாது. இருவருக்கு இடையே இருப்பது கொள்கை கூட்டணி. நான் பலமுறை பெருமையாக சொல்லிருக்கிறேன், என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது திருமாவளவன் தான். எனவே திருமாவளவனுக்கு என்றைக்குமே எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி அமர்ந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் இன்று பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்த விவாதத்தின்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைத் தனது அரசியல் ஆசான் என்று குறிப்பிட்டுப் பேசினார். இதற்கிடையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் இன்று நடைபெறவுள்ளன.