PulseNews
வணிகம்

‘ஏன் டென்ஷன்?...’; - அமைச்சர் என்.ஆனந்த் - உதயநிதி இடையே காரசார விவாதம்!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 5ஆம் நாளான நேற்று (10-08-26) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கலைஞர் காலத்திலும் சரி, மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி அமைச்சர்களுக்கெல்லாம் ஒரு பதபதப்பு இருக்கும். ஏனென்றால் காலையிலேயே பேப்பரை படித்து எங்களுடைய தலைவர்கள் அந்த துறையினுடைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் நேரடியாக பேசுவார்கள். அந்த துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை சரி செய்ய சொல்வார்கள். ஒரு டென்ஷனிலேயே ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் நீங்கள் ரொம்ப ரிலாக்‌ஷாக இருக்கிறீர்கள், அது தான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார். அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “எங்களுடைய முதல்வர் சின்ன வாய்க்கால் பிரச்சனைக்கு கூட போன் அடித்து அதை உடனே சரி செய்துவீட்டீர்களா என்று கேட்கிறார். நீங்களாவது ஐந்து வருடம் தான் டென்ஷனாக இருக்கிறீர்கள், நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று கலகலப்பாக கூறினார். இந்த விவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று தவெக எம்.எல்.ஏவின் பேச்சால் அமைச்சர் என்.ஆனந்த் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் 6ஆம் நாளான இன்று (11-08-26) சட்டப்பேரவை கூடிய நிலையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய தவெக எம்.எல்.ஏ சுகுமார், “கடந்த 5 ஆண்டுகளாக டென்ஷனாக இருந்தோம் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேற்று பேசினார். அதற்கு காரணம் கதவை தட்டுவது அமலாக்கத்துறையா, லஞ்ச ஒழிப்புத்துறையா என தெரியாமல் டென்ஷனாக இருந்தார்கள். எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாக தான் இருப்போம்” என்று கூறினார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எழுந்து நின்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 5 வருடங்களாக டென்ஷனாக இருந்தோம் என எங்களுடைய முன்னாள் அமைச்சர் நேற்று பேசினார். அதே போல் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தும் நிமிடத்திற்கு நிமிடம் டென்ஷனாக இருப்பதாகவும் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். எனவே அதை திரித்து சொல்ல வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கிறது, வருமான வரித்துறை வழக்கு எல்லாம் இருக்கிறது” என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதெல்லாம் சரி தான். எங்களுடைய டென்ஷன், எங்களுடைய முதல்வர் தொகுதியில் மக்கள் பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்படுகிறதா? என கேட்பார் என்பதை தான் நேற்று குறிப்பிட்டேன். அதை தவிர வேறு எந்த அர்த்தத்திலும் இல்லை. எங்களை பயமுறுத்தியோ டென்ஷனாகவோ குறிப்பிடவில்லை. முன்பெல்லாம் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது முதல்வர் பேசுவார் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது போன் வந்தாலே பயம் இருக்கிறது. தொகுதியில் சின்ன பிரச்சனை என்றால் கூட அதை ஏன் செய்யவில்லை என்று கேட்பவர் தான் எங்களுடைய முதல்வர்” என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அதே எண்ணத்தில் தான் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினரும் பேசினார்” என்று கூற இருவருக்குமிடையேயான விவாதம் முடிவுக்கு வந்தது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘ஏன் டென்ஷன்?...’; - அமைச்சர் என்.ஆனந்த் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் ஐந்தாவது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே காரசாரமான விவாதம் எழுந்தது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது உரையில், கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலங்களில் அமைச்சர்கள் எப்போதும் ஒரு பதற்றத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வு அவையில் விவாதத்தை ஏற்படுத்தியது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business