“இந்த ஊதாரித்தனம் தேவை தானா?” - அரசு கார் குறித்து சீமான் சரமாரி கேள்வி
“ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?. அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்?. அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் தற்போதைய சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய அவசியம் என்ன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு கார் வழங்கும் இந்த நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் எந்த உறுப்பினராவது அரசை எதிர்த்து கேள்வி கேட்பார்களா என்று சீமான் வினவியுள்ளார். அரசை விமர்சிப்பதைத் தடுப்பதற்காக இது மறைமுகமாக வழங்கப்படும் கையூட்டா என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.