PulseNews
வணிகம்

பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?

மஹிந்திரா பொலிரோ காரின் விலை மற்றும் முழுமையான இஎம்ஐ விவரங்கள்

ஒரு காலத்தில் நமது நாட்டில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி மாடலாக மஹிந்திரா பொலிரோ இருந்தது. இடையில் இந்த வாகனத்திற்கான தேவை சற்றே குறைந்திருந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்த காரில் சில புதிய மாற்றங்களை செய்துள்ளது.

இதன் விளைவாக, பொலிரோ விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கரடுமுரடான சாலைகள் முதல் நகரங்களில் உள்ள குறுகிய வீதிகள் வரை எவ்வித சிரமுமின்றி சிறப்பாக பயணிக்க ஏற்ற வாகனமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, இது இந்திய குடும்பங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக இருந்து வருகிறது. சுமார் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் வரும் இந்த சக்திவாய்ந்த எஸ்யூவி காரை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வர விரும்பினால், முதலில் அதன் முன்பணம் மற்றும் மாதத் தவணை குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

விலை என்ன?

மஹிந்திரா பொலிரோவின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.49 லட்சத்தில் தொடங்கி, டாப் ஸ்பெக் மாடலுக்கு ரூ.9.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த காரின் ஆன் ரோடு விலை ரூ.9.40 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை மாறுபடும். எளிய கடன் வசதி மூலம் இதனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாதத் தவணை எவ்வளவு வரும் என்பதை பார்ப்போம்.

அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான பேஸ் வேரியண்ட் B4 மாடலின் ஆன் ரோடு விலை டெல்லியில் சுமார் ரூ.10.15 லட்சமாக உள்ளது. நீங்கள் 10% முதல் 20% வரை முன்பணம் செலுத்தி, 9.5% சராசரி வட்டியில் வங்கி கடனை பெற்றால், கணக்கீடு பின்வருமாறு அமையும். ரூ.2.15 லட்சம் முன்பணம் செலுத்தினால், உங்கள் கடன் தொகை ரூ.8 லட்சமாக குறையும்.

இந்த 8 லட்சத்திற்கான இஎம்ஐ

3 ஆண்டுகளுக்கு: மாதம் சுமார் ரூ.25,630
5 ஆண்டுகளுக்கு: மாதம் சுமார் ரூ.16,800
7 ஆண்டுகளுக்கு: மாதம் சுமார் ரூ.13,065.

ரியர் வாஷ் வைப்பர், ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டேட்டிக் பெண்டிங் ஹெட்லேம்ப்ஸ் போன்ற கூடுதல் வடிவமைப்பு அம்சங்களை விரும்புபவர்கள் டாப் ஸ்பெக் பொலிரோ B6 வேரியண்ட்டை தேர்வு செய்யலாம். வரிகளைப் பொறுத்து இதன் ஆன்-ரோடு விலை ரூ.10.75 லட்சம் முதல் ரூ.11.10 லட்சம் வரை இருக்கும். தோராயமாக ரூ.10.90 லட்சம் ஆன்-ரோடு விலையில், ரூ.2.10 லட்சம் முன்பணம் செலுத்தினால், மீதமுள்ள கடன் ரூ.8.80 லட்சமாக இருக்கும்.

9.5% வட்டியில் இதற்கான இஎம்ஐ:

3 ஆண்டுகளுக்கு: மாதம் சுமார் ரூ.28,190
5 ஆண்டுகளுக்கு: மாதம் சுமார் ரூ.18,480
7 ஆண்டுகளுக்கு: மாதம் சுமார் ரூ.14,370.

இந்த காரை வாங்க கடன் பெறும்போது 750 அல்லது அதற்கும் மேலான நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், வங்கிகள் 8.5% முதல் 9% வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும். இதனால் உங்களின் இஎம்ஐ கணிசமாக குறையும். மேலும் 0.5% முதல் 1% வரை பிராசஸிங் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
PulseNews சுருக்கம்

மஹிந்திரா பொலிரோ காரின் அதே பழமையான ஸ்டைல் மற்றும் பொலிவுடன், தற்போது புதிய அப்டேட்டுகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் காரின் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த காரின் தற்போதைய விலை மற்றும் இஎம்ஐ (EMI) முறை மூலம் எளிதாக வாங்கும் வழிமுறைகள் குறித்த முழுமையான விவரங்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பொலிரோ காருக்கான வரவேற்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business