PulseNews
வணிகம்

‘பாசனத்திற்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது?’- வெளியான முக்கிய தகவல்!

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, நடப்பு ஆண்டில் திறக்கப்படாதது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவி வந்தது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் வெடித்து வருகிறது. அதே சமயம் கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து கடந்த ஒரு வாரக் காலமாக வரலாறு காணாத அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத் தொடர் நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து தற்போது 90 அடியை எட்டியுள்ளது. இதனையொட்டி நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை வரலாற்றின் 92வது ஆண்டாகக் காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். முதலமைச்சரான பின் முதல் முறையாக மேட்டூருக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அணையைத் திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நீர் திறப்பிற்கான ஆயத்தப் பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகளும், சேலம் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். அணையின் வலது கரை மேல்மட்ட மதகுப் பகுதியில் மின்சார அமைப்புகளைச் சீரமைக்கும் பணியும், முதலமைச்சர் நின்று தண்ணீரைத் திறந்து வைப்பதற்கான பிரத்யேக மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘பாசனத்திற்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது?’- வெளியான முக்கிய தகவல்!
PulseNews சுருக்கம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, வழக்கமாக ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காகத் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் தண்ணீரைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாமதம் தற்போது பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business