PulseNews
வணிகம்

நல்ல செய்தி... அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் ரேஷன் பொருள்கள் வாங்கும் நடைமுறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மின்னணு வடிவிலான அட்டை அல்லது ரேஷன் அட்டை எண் இருந்தாலே பொருள்களை வாங்க முடியும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அசல் ரேஷன் அட்டை இனி கட்டாயமில்லை ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது அட்டையை எடுத்துச் செல்வது சில நேரங்களில் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ரேஷன் அட்டை யின் மின்னணு வடிவத்தை பயன்படுத்தும் வசதி அல்லது அதன் எண்ணை தெரிவித்து பொருள்களை பெறும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இதனால் அட்டையை மறந்துவிட்டாலோ, கையில் இல்லாத சூழலிலோ பொதுமக்கள் சிரமப்பட வேண்டிய நிலை இருக்காது. இதையும் படிங்க: ரேஷன் கடை திறந்திருக்கிறதா.? வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி.! வரிசையில் காத்திருப்பதை குறைக்க 150 புதிய கடைகள் இதனிடையே, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெரிய நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு, புதிதாக 150 நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு கடையில் அதிக எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்கள் குவிவது தவிர்க்கப்படும். பொதுமக்களுக்கு எளிதாகும் பொருள் விநியோகம் புதிய கடைகள் செயல்பாட்டுக்கு வந்ததும், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்களை விரைவாகவும் சிரமமின்றியும் பெற்றுச் செல்லும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ரேஷன் அட்டையின் மின்னணு பயன்பாடு மற்றும் கூடுதல் கடைகள் மூலம் பொருள் விநியோக நடைமுறையை மேலும் எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இனி இவர்களுக்கு கிடையாது! தமிழக அரசின் அதிரடி...!!!

Tamil Spark13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நல்ல செய்தி... அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் முறையில் முக்கிய மாற்றத்தை உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இனி பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளுக்குச் செல்லும்போது அசல் ரேஷன் அட்டையை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மின்னணு வடிவிலான ரேஷன் அட்டை அல்லது ரேஷன் அட்டை எண் ஆகியவற்றை வைத்தே இனி பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். அசல் அட்டையை எடுத்துச் செல்வதில் பொதுமக்களுக்கு இருந்து வந்த சிரமங்களைக் குறைக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#business