PulseNews
வணிகம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய வரலாறு: தற்காலிக சபாநாயகர் தலைமையில் நாளை பட்ஜெட்!

புதுச்சேரி: புதுச்சேரியில் 16-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஆகஸ்ட் 24) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. வழக்கமாக பேரவைத்தலைவர் தலைமையில் நடைபெறும் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகள், இந்த முறை பேரவைத்தலைவர் தேர்தல் நடைபெறாததால் தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய சூழலில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த மே 20-ம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அன்றைய தினம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

பேரவைத்தலைவர் தேர்தலில் நீடிக்கும் இழுபறி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பேரவைத்தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துணைநிலை ஆளுநருக்கு கடந்த ஜூன் மாதமே கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை தேர்தல் நடத்துவதற்கான ஒப்புதல் கிடைக்காததால் பேரவைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.

ஆளும் கூட்டணியில் பேரவைத்தலைவர் பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதே இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பேரவைத்தலைவர் பதவியை பாஜக கோரி வரும் நிலையில், முதல்வர் என். ரங்கசாமி அந்தப் பதவியை அதிமுகவுக்கு வழங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணிக்குள் நீடித்து வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிந்து சுமார் 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பேரவைத்தலைவர் தேர்தல் நடைபெறாததால், வழக்கமான நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் ஆளுநர் உரை

வழக்கமாக பேரவைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் பேரவைத்தலைவர் தலைமையில் ஆளுநர் உரை நடைபெறும். அதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை பேரவைத்தலைவர் தேர்வு செய்யப்படாததால் தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் தலைமையில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவைக்கு வருகிறார். அவரை தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் வரவேற்று, பேரவைத் தலைவருக்கான இருக்கைக்கு அழைத்துச் செல்வார்.

அதன்பின்னர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார். அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்டவை உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரை நிறைவடைந்ததும், அவரை வழியனுப்பி வைத்த பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த அலுவல்கள் மற்றும் மசோதாக்களை எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

மதியம் 3 மணிக்கு பட்ஜெட் தாக்கல்

இதைத்தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரியின் நிதிநிலை, வருவாய் மற்றும் செலவினங்கள், அரசின் நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

ரூ.14,300 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இம்முறை புதுச்சேரிக்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியின் வருவாய் நிலை, மத்திய அரசின் நிதியுதவி, அரசு ஊழியர்களுக்கான செலவினங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் பேரவைத்தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து ஆளும் கூட்டணிக்குள் இழுபறி நீடித்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையின் நாளைய கூட்டம் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பேரவைத்தலைவர் தேர்தல் இன்னும் நடைபெறாத நிலையில், தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் ஆளுநர் உரையும், அதே நாளில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வதும் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைய உள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய வரலாறு: தற்காலிக சபாநாயகர் தலைமையில் நாளை பட்ஜெட்!
PulseNews சுருக்கம்

புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. வழக்கமாக பேரவைத்தலைவர் முன்னிலையில் நடைபெறும் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகள், இம்முறை தற்காலிக சபாநாயகர் தலைமையில் நடைபெறுகின்றன.

பேரவைத்தலைவர் தேர்தல் இதுவரை நடைபெறாததால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் இத்தகைய சூழலில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business