தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி இழப்பு.. கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது என மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு | Anbumani Ramadoss
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 9D பிரிவை சேர்க்கும் மத்திய அரசின் சட்டத்திருத்த முன்வரைவுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வருவாய் பாதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 9டி பிரிவைச் சேர்க்கும் மத்திய அரசின் சட்டத்திருத்த முன்வரைவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்தத் திருத்தத்தினால் தமிழக அரசுக்கு சுமார் 11,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் இந்தச் சட்டத்திருத்தம் தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவரது வலியுறுத்தலாக உள்ளது.