PulseNews
வணிகம்

சட்டப்பேரவையில் ஒலித்த ஜி ஸ்கொயர்! சபரீசனுடன் தொடர்பை நிரூபித்தால் ரூ.5,000 கோடி பங்கு எழுதி தரேன்.. ஜி ஸ்கொயர் நிறுவனர் சவால்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களுக்கு இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் திமுக முன்னாள் தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தொடர்பான விவகாரம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி, கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலம் தொடர்பான பணிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். விவசாயிகள் சிறிய தவறு செய்தால்கூட வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜி ஸ்கொயர் நிறுவனத்தைப் பற்றி பேசும்போது திமுகவினர் ஏன் கோபப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து சமூக வலைதளங்களிலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தையும் சபரீசனையும் தொடர்புபடுத்தி பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பால ஜெயராமன், தமக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்தால் தனது நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இலவசமாக வழங்குவதாக பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சபரீசனை இதுவரை இரண்டு முறை மட்டுமே பார்த்துள்ளதாகவும், அவருடன் தனக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிடுமாறும் தெரிவித்தார். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வேண்டுமானால் புகைப்படங்களை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், தங்களது நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், ரூ.2,300 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்த பால ஜெயராமன், 2012ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். தங்களை விசாரிக்காத அரசு விசாரணை அமைப்புகளே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "எனக்கும் சபரீசன் சாருக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபித்தால், என் நிறுவனத்தின் 50 சதவீத பங்கை இலவசமாக எழுதி கொடுக்கிறேன்" என்று அவர் பகிரங்கமாக சவால் விடுத்தார். பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்தார். பரந்தூர் மற்றும் பண்ணூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு 900 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதற்காகவே அப்பகுதியில் விமான நிலையம் கொண்டு வரப்படுவதாகவும் முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதாக அவர் கூறினார். அந்த தகவல்களுக்கு அப்போதே தங்கள் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியதாகவும் பால ஜெயராமன் தெரிவித்தார். மேலும், ஊடக நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் வழங்குவது வழக்கமான நடைமுறை என்றும் அவர் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகளில் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு நிகழ்ச்சியில் சபரீசன் கலந்து கொண்டதை மட்டும் வைத்து தங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூற முடியாது என்றும் விளக்கம் அளித்தார். இதனால் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், ரூ.5,000 கோடி மதிப்பிலான நிறுவனப் பங்குகளை தருவதாக அதன் நிறுவனர் விடுத்துள்ள பகிரங்க சவால் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டப்பேரவையில் ஒலித்த ஜி ஸ்கொயர்! சபரீசனுடன் தொடர்பை நிரூபித்தால் ரூ.5,000 கோடி பங்கு எழுதி தரேன்.. ஜி ஸ்கொயர் நிறுவனர் சவால்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது, ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் திமுக முன்னாள் தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இடையிலான தொடர்பு குறித்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியது. கோவை நில விவகாரத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் மறுத்துள்ளார். சபரீசனுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்தால், தனது நிறுவனத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை எழுதித் தருவதாக அவர் சவால் விடுத்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business