மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை செலுத்தும்! நந்தலால் வீரசிங்க உறுதி
இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை நாடு நிறைவேற்றும் எனவும் உறுதியளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டுத் தூதர்கள் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை வெளிப்படுத்தினர். மேலும் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் வெற்றியே இதற்குக் காரணம் என்றும், நாடு கடன் செலுத்தத் தவறுதல் அல்லது முன்னர...

இலங்கை பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்களையும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எவ்விதத் தடையுமின்றி முழுமையாகச் செலுத்தி முடிக்கத் தமக்குத் திறன் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுத் தூதர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
கடன் மறுசீரமைப்புச் செயல்முறை அடைந்துள்ள வெற்றியே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாடு மீண்டும் கடன் செலுத்தத் தவறும் நிலையைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.