ஏரிகள், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் நாளை தொடங்கும்
வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை புனரமைக்கத் திட்டம் 10,185 கால்வாய்கள், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளை புனரமைக்கும் பணிகள் நாளை தொடங்கும் சென்னை நீங்கலாக உள்ள 37 மாவட்டங்களுக்கு ரூ.507.92 கோடி நிதி ஒதிக்கீடு அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.116.38 கோடி நிதி ஒதுக்கீடு திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.32.69 கோடி, விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு

வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் கிராம வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரிப் புனரமைக்கும் பணிகள் நாளை தொடங்குகின்றன. சென்னை நீங்கலாக மாநிலத்தின் 37 மாவட்டங்களில் மொத்தம் 10,185 கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகளைச் சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக ரூ.507.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.116.38 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.32.69 கோடியும், விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.30 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது.