Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ

தங்கம் விலை உயர காரணம் .?

தங்கத்தின் விலையானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு மத்தியிலேயே ஒரு சவரன் 2 லட்சத்தை தொடும் என நகை வியாபாரிகள் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில், திடீரென 1.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது ஒரு லட்சம் ரூபாய்க்கு சரிந்தது. அடுத்த சில மாதங்களாகவே ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு சுமார் 7 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து நகைப்பிர்களை அதிர வைத்துள்ளது.

போர் நிறுத்தம்- உயரும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக குறைய முக்கிய காரணமாக கூறப்படுவது அமெரிக்கா- ஈரான் போராகும். இந்த போரின் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலையாது உயர தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீட்டை அதிகப்படுத்தினார்கள். இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. தற்போது போர் பதற்றம் சற்று ஓய்ந்திருப்பதால் மீண்டும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.

உயரும் தங்கம் விலை

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்து 1,07,840 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து 13,750 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் அதிகரித்து 1,10,000 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 7ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13,965 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 1,11,720 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 6000 ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர வைத்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்று இல்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.