PulseNews
வணிகம்

Chennai News Live Updates: 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

பெட்ரோ, டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விற்பனை விலையில் எந்தவித மாற்றமுமின்றி முந்தைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97.00 என விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எம்.பி-க்களுக்கு அலுவலகம் கட்டித் தர வேண்டும் - ஜோதிமணி கோவை திவ்யோதயா அரங்கில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் ’நடந்தது என்ன’ என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்.பி ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது, அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற, உறுப்பினர்கள் வசதியாக இருப்பதில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் அடிப்படையான சில விஷயங்கள் செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என அலுவலகம் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என தனியாக ஒரு அலுவலகம் கட்டிக் கொடுக்க வேண்டும். நாங்கள் கார் கேட்கவில்லை. எல்லாரும் கார் வைத்து இருக்கின்றோம் என பதிலளித்தார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Chennai News Live Updates: 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
PulseNews சுருக்கம்

சென்னையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 107.77 ரூபாய்க்கும், டீசல் 99.55 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி 97.00 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்டித் தரப்பட வேண்டும் என்று ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business