PulseNews
வணிகம்

TN Assembly News Live Updates: விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது சட்டமன்றம்; 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை

TN Assembly News Live Updates: தமிழக சட்டமன்றத்தில் 2026-2027ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் 6-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதங்கள் 7, 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்றன. தொடர்ந்து, 12-ஆம் தேதி நிதி அமைச்சர் மரியா வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரையுடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 17-ஆம் தேதி முதல் துறை ரீதியிலான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடங்கின. சுதந்திர தின விடுமுறை (4 நாட்கள்) மற்றும் வார இறுதி விடுமுறைகளான 22, 23 ஆகிய தேதிகளுக்குப் பிறகு, இதுவரை மொத்தம் 18 துறைகள் மீதான விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், வார விடுமுறைக்குப் பின் திங்கள் கிழமையான இன்று காலை 9.30 மணிக்குச் சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது. இன்றைய அமர்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் உயர் கல்வி ஆகிய 6 முக்கியத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான ஜோசப் விஜய், செய்தி மற்றும் விளம்பரம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் பதிலளித்துப் பேசவுள்ளனர். விவாதத்தின் நிறைவாக, தங்கள் துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட உள்ளதால் இன்றைய சட்டமன்றக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Assembly News Live Updates: விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது சட்டமன்றம்; 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை
PulseNews சுருக்கம்

விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 12-ஆம் தேதி அமைச்சர்களின் பதிலுரையுடன் நிறைவு பெற்ற நிலையில், துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business