டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் ஸ்டான்லி அணையின் மதகுகள் செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணிக்கு திறக்கப்பட்டன. முதல்வர் சி. ஜோசப் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்று, மலர்க…

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் ஸ்டான்லி அணையின் மதகுகள் செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணிக்கு திறக்கப்பட்டன. முதல்வர் சி. ஜோசப் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்று, மலர்கள் மற்றும் தானியங்களைத் தூவி தண்ணீரை திறந்து வைத்தார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கும் முதல் நிகழ்வு இதுவாகும்.
வழக்கத்தை விட 80 நாட்கள் தாமதமாக இந்த அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலைக்குள் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த நீர் இருப்பு, அடுத்த 45 நாட்களுக்கு விவசாயத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.