கேரளத்தில் அமைகிறது புதிய தேங்காய் பூங்கா: ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க திட்டம்
கேரளாவில் தேங்காய் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பதற்கும், அவற்றின் ஏற்றுமதியை உலகளாவிய அளவில் ஊக்குவிப்பதற்கும் மாநில அரசு புதிய தேங்காய் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. திருவனந…

கேரளாவில் தேங்காய் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பதற்கும், அவற்றின் ஏற்றுமதியை உலகளாவிய அளவில் ஊக்குவிப்பதற்கும் மாநில அரசு புதிய தேங்காய் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் அமையவுள்ள இந்தப் பூங்காவானது, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தரமான தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதும், தேங்காய் சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்தி அந்தத் துறையில் புதிய வளர்ச்சிகளை உருவாக்குவதும் அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. இந்த முயற்சி முதலீடுகளை ஈர்ப்பதோடு, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேங்காய் பூங்கா அமைப்பதன் மூலம் மாநிலத்தின் தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். தரமான உற்பத்தி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கேரளாவின் தேங்காய் சார்ந்த வர்த்தகம் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.