சென்னை தூய்மைப் பணியாளர்களின் 15 நாள் போராட்டம் வாபஸ்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு
சென்னைப் பெருநகர மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவ…

சென்னைப் பெருநகர மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
பணியாளர்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு ஒரு சுமூகத் தீர்வு காண்பதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் போராட்டக் களத்திற்கே நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் இந்த முடிவை பணியாளர்கள் எடுத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக, போராட்டத்தை தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.