இந்தியாவிடமோ அல்லது வேறு எந்த நாட்டிடமோ இழப்பீடு கோரவில்லை: நேபாள அரசு விளக்கம்
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்தினால் உருவான பேரிடர்கள் தொடர்பாக, இந்தியா உட்பட உலகில் உள்ள எந்தவொரு நாட்டிடமும் தாங்கள் இழப்பீட்டுத் தொகையை கோரவில்லை என்று நேப…

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்தினால் உருவான பேரிடர்கள் தொடர்பாக, இந்தியா உட்பட உலகில் உள்ள எந்தவொரு நாட்டிடமும் தாங்கள் இழப்பீட்டுத் தொகையை கோரவில்லை என்று நேபாள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சர், இந்தியாவிடம் இழப்பீடு கேட்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மறுத்துள்ளார். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக எந்தவொரு நாட்டு நிர்வாகத்திடமும் தங்களது அரசு நேரடியாக நிதி இழப்பீட்டை கோரவில்லை என்பதை அந்நாட்டு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.