PulseNews
வணிகம்

4 மடங்கு அதிக கட்டணம்? வைஷாலி வீடியோவுக்கு மின்சார வாரியம் விளக்கம்

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி வருகிறது. வழக்கமாக வரும் தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிக அளவில் மின் கட்டணம் கணக்கிடப்படுவதாகக் கூறி, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஒருசில வீடுகளில் கட்டணம் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளதாகப் புகார்கள் பரவலாக எழுந்துள்ளன. இந்தச் சூழலில், மின் கட்டண உயர்வு குறித்து நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை நம்பி முன்பு தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அதுகுறித்துப் பேசியதற்காக இப்போது மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போதைய கட்டண உயர்வால் எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலவசத் திட்டங்களைவிட பழைய முறையிலேயே நியாயமான கட்டண வசூல் இருந்தால் போதும் என்றும் அவர் தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். நடிகையின் இந்த வீடியோ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, "இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை. இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத்... https://t.co/rKiD5hmt0U — TANGEDCO Official (@TANGEDCO_Offcl) August 12, 2026 புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
4 மடங்கு அதிக கட்டணம்? வைஷாலி வீடியோவுக்கு மின்சார வாரியம் விளக்கம்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் குழப்பமும் நிலவி வருகிறது. குறிப்பாக, ஒரு சில வீடுகளில் மின் கட்டணம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன, இது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், மின் கட்டண உயர்வு குறித்த நடிகை வைஷாலியின் வீடியோ இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில், இது தொடர்பாக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business