நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்; 2 வது நாளாக சரிந்த தங்கம் விலை
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று (28-08-2026) மேலும் குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சிய அடைந்துள்ளனர். இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650 (அடிப்படையில் சென்னை விலை அறிவிப்புப்படி 1 கிராம் ரூ.14,725) ஆகவும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினமும் (27-08-2026) தங்கம் விலையில் இருமுறை அதிரடி சரிவு ஏற்பட்டது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.560-ம், மாலையில் ரூ.1,720-ம் குறைந்து, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 வரை சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 நாட்களின் தங்கம் (22 கேரட்) சவரன் விலை நிலவரம்: ஆகஸ்ட் 27: ரூ.1,17,800 ஆகஸ்ட் 26: ரூ.1,20,080 ஆகஸ்ட் 25: ரூ.1,20,080 ஆகஸ்ட் 24: ரூ.1,20,240 ஆகஸ்ட் 23: ரூ.1,19,600 வெள்ளி விலையும் சரிவு: தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,60,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் 25 முதல் 27 வரை ஒரு கிராம் வெள்ளி ரூ.265 என்ற நிலையான விலையில் விற்பனையான நிலையில், இன்று ரூ.260 ஆகக் குறைந்துள்ளது. ஆவணி மாதம் தொடங்கி சுபமுகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சரிவு, திருமணத்திற்கு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. விலை சரிவு காரணமாக நகைப்பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 75 ரூபாய் குறைந்து 14,650 ரூபாயாகவும், சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.