PulseNews
வணிகம்

மாவலி பதில்கள்

என். இளங்கோவன், மயிலாடுதுறை. இப்போது கொடுக்கப்படும் ரேஷன் அரிசி ஆடுமாடுகளுக்குதான் தீவனமாகிறது என்று கூறுகிறாரே செங்கோட்டையன்..? ஒப்பீட்டளவில், முன்பு வந்ததைவிட இப்போது வரும் ரேஷன் அரிசி நன்றாகவே இருக்கிறது. அடுத்ததாக, ரேஷன் அரிசியை ஆடுமாடுகளுக்குப் போடுபவர்களுக்கு அந்த அரிசி தேவையில்லை. அத்தகையவர்களைக் கண்டுபிடித்து அவர்க ளுடையதை அரிசி கார்டிலிருந்து சர்க்கரை கார்டாக மாற்றவேண்டும். செங்கோட்டையனும் முதல்வரும் இஷ்டப்பட்டு மத்திய தொகுப்பிலிருந்து வாங்கும் ரேஷன் அரிசியை நிறுத்திவிட்டு, மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா போட்டால் தமிழக மக்கள் வேண்டாமென்றா சொல்லப்போகிறார்கள்! செந்தில்குமார். எம், சென்னை. இந்து சமய அறநிலையத் துறையை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வேவுபார்ப்பதாக, அமைச்சர் ரமேஷ் சொல்வது பற்றி? ஆளுங்கட்சியின் ஒவ்வொரு துறையையும் எதிர்க்கட்சிகள் வேவுபார்த்து, ஊழல், முறைகேடு நடக்காமல் பார்த்துக்கொண்டால் நல்லதுதான். எதிர்க்கட்சிகள் செக்போஸ்ட்டாக செயல்பட்டால் தான் ஜனநாயகம் சிறக்கும். அப்போதுதான் பழனி கோவில் நில முறைகேடு போன்ற விவகாரங்கள் நடக்காமல் இருக்கும். மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் மீன்கள் செத்து மிதப்ப தற்கு ஆலைக் கழிவு காரண மல்ல மனிதக் கழிவுதான் காரணம் என்கிறாரே சுற்றுச்சூழல் அமைச்சர்? மனிதக் கழிவு என்றால் அமைச் சர் எதைச் சொல்கிறார்? நார்மலாக நாம் நினைக்கும் கழிவென்றால் அதை மீன், புளு, பூச்சிகள் சுத்திகரித்து விடும். அதற்கெல்லாம் மீன்கள் செத்துமிதக்காது. விளக்கம் சொன் னால் நம்புகிற மாதிரி இருக்கவேண் டும். எடுத்ததற்கெல்லாம் காதில் பூச்சுற்றினால் மக்களும் உரிய நேரத் தில், உரிய விதத்தில் ஆட்சியாளர் கள் காதில் பூச்சுற்றுவார்கள். கே.ஆர்.அசோகன், கிட்டம்பட்டி மகாத்மா காந்தியின் கையெழுத்து, ரூ.16.2 கோடிக்கு விற்பனையானது குறித்து? மகாத்மா காந்தி 1944 முதல் 1946 வரை தனது நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோ ரானிக்காக எழுதிய 688 கையெ ழுத்துப் பதிவுகளின் தொகுப்பு ஆகஸ்ட் 19, 2026 அன்று மும்பையில் நடந்த சஃப்ரான்ஆர்ட் ஏலத்தில் ரூ.16.2 கோடிக்கு விற்பனையானது. இது ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணங்களில் மிக அதிகபட்ச விலையாகும். மனைவி வித்யா இறந்த துயரத்தில் இருந்த ஆனந்த் ஹிங்கோரானிக்கு காந்தி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இது. பின்னர் அவை A Thought for the Day என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன. சிவா, கல்லிடைக்குறிச்சி. அமித்ஷா தன்னை வல்லபபாய் பட்டேல் என நினைக்கிறாரா? எனக்கென்னவோ, டெல்லி ஜந்தர்மந்தர் போராட்டம், பீகார் போராட்டத்தில் நடந்ததை வைத்துப் பார்த்தால் அவர் தன்னை ஜெனரல் டயராகவும், போராட்டம் நடத்துபவர்களை ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சிக்கிய மக்கள் போலவும்தான் நினைக்கிறார் என்று படுகிறது. கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு. "காங்கிரஸ் தயவில்தான் இங்கு த.வெ.க. ஆட்சி' என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுவது பற்றி? மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்கள். இங்கேயும் த.வெ.க. ஆட்சியமைந்து நூறு நாட்களாகிவிட்டது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஜோடி டைவர்ஸுக்கு அப்ளை பண்ணும் போலல்லவா இருக்கிறது. வைரபாலா, மன்னார்குடி மோடி 1947-ல் பிரதமராக இருந்திருந்தால் நாட்டுப் பிரிவினை நடக்க அனுமதித்திருக்க மாட்டாராமே? கி.மு. 327-325 காலகட்டத்தில் மோடி இந்தியச் சக்கரவர்த்தியாக இருந்திருந்தால் அலெக்சாண்டர் இந்தியா பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட் டார் என்றுகூடதான் பா.ஜ.க.வினர் சொல்வார்கள். ஏன், இப்போது இந்தியா மீது டேரிஃப் போடும் அமெரிக்கா, இந்திய எல்லைகளுக்கு சீனப் பெயர் வைக்கும் சீன அதிபரிடம் வீரத்தைக் காட்ட வேண்டியதுதானே!

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மாவலி பதில்கள்
PulseNews சுருக்கம்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுவதாக செங்கோட்டையன் கூறியுள்ள கருத்தை என். இளங்கோவன் விமர்சித்துள்ளார். முன்னதாக வழங்கப்பட்ட அரிசியை விட, தற்போது கிடைக்கும் ரேஷன் அரிசி தரமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் அரிசியைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த அரிசி தேவையில்லை என்பதால், அத்தகைய நபர்களைக் கண்டறிந்து அவர்களின் ரேஷன் அட்டையைச் சர்க்கரை அட்டையாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய தொகுப்பிலிருந்து அரிசி வாங்குவதை நிறுத்திவிட்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business