ஐரோப்பால வெயில் கொளுத்துதா? கவலைய விடுங்க... இந்த டெஸ்டினேஷன் தான் கரெக்ட்; 40% ஆஃபர்ல ஒரு யூரோப் ட்ரிப்
விடுமுறையைக் கழிக்க வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிடும் போது, நமது விருப்பங்களை விட பட்ஜெட் தான் முதன்மையான முடிவை எடுக்க வைக்கிறது. ஐரோப்பாவின் மிகவும் புகழ்பெற்ற 7 சுற்றுலாத் தலங்களில் வாழ்க்கைச் செலவு மற்றும் சுற்றுலாச் செலவுகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் 'Eurostat' புள்ளிவிவரங்களை வைத்து 'Euronews Business' ஒப்பீடு செய்து வெளியிட்டுள்ளது. ஒரு கப் டீ விலை ரூ 8.5 லட்சமா? இந்த மரத்துக்கு ரூ.142 கோடி இன்சூரன்ஸ் வேற; தங்கத்தை விட 30 மடங்கு மதிப்புள்ள தேயிலை ஒட்டுமொத்த செலவில் துருக்கிதான் கெத்து ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரவு மற்றும் பொருட்களின் விலையை ஒப்பிடும்போது, துருக்கி தான் மிகவும் மலிவான நாடாக முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் €100 செலவாகும் நேரத்தில் துருக்கியில் வெறும் €59.60 மட்டுமே செலவாகிறது. பிரான்ஸ் தான் ரொம்ப காஸ்ட்லி ஆய்வு செய்யப்பட்ட 7 நாடுகளில் பிரான்ஸ் தான் மிகவும் விலை உயர்ந்த இடமாக உள்ளது. ஐரோப்பிய சராசரியை விட அதிகமாக, பிரான்ஸில் €110.3 செலவாகிறது. இடைப்பட்ட நிலையில் உள்ள பிற நாடுகள் இத்தாலி : விலை குறியீடு 97.1 ஸ்பெயின் : விலை குறியீடு 91.6 கிரீஸ் : விலை குறியீடு 87.4 போர்ச்சுகல் : விலை குறியீடு 86.6 குரோஷியா : விலை குறியீடு 78.4. ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி விலையான 100-ஐ விடக் குறைவாக இருந்தாலும், இந்த நாடுகளுக்கு இடையே கணிசமான விலை வேறுபாடுகள் உள்ளன. தங்குமிடம் மற்றும் உணவு - போர்ச்சுகல் தான் பெஸ்ட் சுற்றுலாச் செலவில் பெரும்பகுதியை அடைப்பது தங்குமிடம் மற்றும் உணவுதான். தங்குமிடம் மற்றும் உணவுக்கு ஐரோப்பாவிலேயே மிக மலிவான நாடாக போர்ச்சுகல் உருவெடுத்துள்ளது. இது ஐரோப்பிய சராசரியை விட 26.4% குறைவு ஆகும். இரண்டாமிடம்: துருக்கி (குறியீடு 78.3) இரண்டாம் இடத்தில் உள்ளது. தங்குமிடம் மற்றும் உணவுக்கு பிரான்ஸ் (குறியீடு 116) முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து இத்தாலி (குறியீடு 110.8) மற்றும் குரோஷியா (குறியீடு 89.6) ஆகியவையும் உள்ளன. ஸ்பெயின் மற்றும் கிரீஸ்: இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான செலவைக் கொண்டுள்ளன. முறையே குறியீடு 85.4 மற்றும் 86.1 ஆகும்.

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →