பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பாகிஸ்தானில் போராட்டம்
பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை பாய்ந்தது: அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம், புதிய வரி காரணமாக மக்களின் வாழ்க்கை சிரமத்தில், லாகூரை சேர்த்து நாடு தழுவிய போராட்டம் வெடித்தது. Pakistan fuel price hike protests: US-Iran conflict drives petrol, diesel and essential prices up, new taxes deepen crisis as Jamaat-e-Islami leads nationwide demonstrations against Shehbaz Sharif government.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூர் உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.