PulseNews
வணிகம்

வட கிழக்கு பருவமழை அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு; மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்

வட கிழக்கு பருவமழை குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஃபாரினர்ஸ் தான் எங்க டார்கெட்டே... கட்டணத்தை 20 மடங்கு உயர்த்தும் ஜப்பான்; ஏன் தெரியுமா? இந்தத் திட்டத்தின் கீழ், 5 மாவட்டங்களில் உள்ள 202 இடங்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கண்காணிப்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் விவரம் திருவொற்றியூர் - பாலசுப்பிரமணியம் மணலி - குமரவேல் பாண்டியன் மாதாவரம் - அருண் ராஜ் தண்டையார்பேட்டை - கண்ணன் ராயபுரம் - ஆஷா அஜித் திருவிக நகர் - கணேசன் அம்பத்தூர் - விவேகானந்தன் அண்ணா நகர் - காயத்ரி கிருஷ்ணன் தேனாம்பேட்டை - கிறிஸ்துராஜ் கோடம்பாக்கம் - கோபால சுந்தரராஜ் வளசரவாக்கம் - விஜய ராணி ஆலந்துார் - வாகே சங்கேத் பல்வந்த் அடையாறு - செந்தில் ராஜ் பெருங்குடி - மகேஸ்வரி சோழிங்கநல்லுார் - பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வட கிழக்கு பருவமழை அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு; மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
PulseNews சுருக்கம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.42 கோடி நிதியை ஒதுக்கி நீர்வளத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான மண்டல வாரியான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business