PulseNews
வணிகம்

கரும்புக்கு ஊக்கத் தொகை: இ.பி.எஸ் - செங்கோட்டையன் காரசார விவாதம்; எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கொடுத்த ரியாக்சன்

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 7-ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோட இருப்போம்... மேப்பில் இருந்து அழியப் போகும் நாடு; ஆனா இணையத்துல கோடி கோடியா சம்பாதிக்குது அப்போது பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமைச்சர் செங்கோட்டையன் கரும்பு ஊக்கத் தொகை குறித்து பேசினார். அன்றைய சூழ்நிலை வேறு. அன்று கூலி உயர்வு கிடையாது, உர விலை உயரவில்லை, டீசல் விலை உயரவில்லை, இன்று எல்லாம் உயர்ந்து விட்டது. அதற்கு ஏற்ப தானே கரும்பிற்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும். அதனால் அதை ஒப்பிட்டு பேசுவது பொருத்தமாக இருக்காது” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “கூலி விலை உயர்வு, உர விலை உயர்வு இதை எல்லாம் எப்போதும் ஒப்பிட்டதே இல்லை. நாம் கேட்பது ஒன்றே ஒன்று, கூடுதல் விலை கொடுக்கப்பட்டுள்ளதாக என்ற ஒரே கேள்வியை தவிர இதை எல்லாம் ஒப்பிட்டு காட்ட இயலாது. நீங்கள் இதுவரை முதலமைச்சராக இருந்த போது ரூ.4,000 கரும்பிற்கு வழங்கி இருக்கிறீர்களா? என்று மட்டும் சொல்லுங்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம்” என்றார். இதற்கு பதிலளித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது யார் இந்த துறைக்கு அமைச்சராக இருந்தார்கள் என்பது தெரியாமல் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகிறார். 2020-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப தான் ஊக்கத் தொகை அதிகமாக கொடுத்திருக்கிறீர்களே தவிர அன்றைக்கு என்ன லாபம் இருந்ததோ அதே லாபம் தான் இன்றைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது” என்றார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சை கேட்டு தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விழுந்து விழுந்து சிரித்தார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கரும்புக்கு ஊக்கத் தொகை: இ.பி.எஸ் - செங்கோட்டையன் காரசார விவாதம்; எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கொடுத்த ரியாக்சன்
PulseNews சுருக்கம்

விஜய் தலைமையிலான தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், கரும்புக்கான ஊக்கத்தொகை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

உர விலை மற்றும் டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டே கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வாதிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த கால ஆட்சியில் 4,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். இருவருக்குமிடையேயான இந்த விவாதத்தின் போது, எடப்பாடி பழனிசாமியின் பேச்சைக் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சிரித்த நிகழ்வு சபையில் நடந்தது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business