PulseNews
வணிகம்

தங்க நகைக்கடன் இனி அதிகம்...! ஒரு கிராமுக்கு ரூ.10 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு...!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் நிதித் தேவையை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடன் தொகையை உயர்த்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஒரு கிராம் தங்க நகையை அடமானமாக வைத்து அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பை உயர்த்தி, ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.9 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால், அவசர நிதித் தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600 என்ற நிலையில் இருந்தது. தங்கத்தின் மதிப்பு அதிகரித்து வருவதால், அதனை அடமானமாக வைத்து பெறக்கூடிய கடன் தொகையையும் உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை கருதுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நாடுவதை குறைத்து, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களிலும் அதிகளவில் தங்க நகைக்கடன் பெறும் வகையில் கடன் வரம்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பொதுமக்களுக்கு எளிதாகவும், கூடுதல் தொகையுடனும் கடன் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் அமைய உள்ளது.ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்குவதற்கான புதிய வரம்பை நிர்ணயிக்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக வரும் வாரத்தில் நடைபெற உள்ள கூட்டுறவுத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, புதிய கடன் வரம்புக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், தங்க நகைகளை அடமானம் வைத்து உடனடி நிதி பெற விரும்பும் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை கடனாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தங்க நகைக்கடன் இனி அதிகம்...! ஒரு கிராமுக்கு ரூ.10 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு...!
PulseNews சுருக்கம்

தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில், பொதுமக்களின் பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தங்க நகைக்கடன் தொகையை அதிகரிக்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் இந்த கடன் தொகையை உயர்த்துவதற்கான புதிய நடைமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தற்போது ஒரு கிராம் தங்க நகைக்கு அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பை உயர்த்தி, இனி வரும் காலங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் வகையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business