PulseNews
வணிகம்

சட்டப்பேரவையில் பாட்டுப் பாடிய சபாநாயகர்; ரசித்துக் கேட்ட முதல்வர் விஜய்!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 5ஆம் நாளான இன்று (10-08-26) சட்டப்பேரவை கூடிய போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து, அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது. அந்த வகையில் தவெக எம்.எல்.ஏ ஒருவர் தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகளைக் கூறும்போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அந்த தொகுதியின் பெயரைக் குறிப்பிட்டு பாடல் பாடினார். மணப்பாறை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ கதிரவன் பேசியதாவது, “மணப்பாறை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மணப்பாறை முறுக்கு தான். தமிழ்நாட்டை தாண்டி உலகம் முழுவதும் மணப்பாறை முறுக்குக்கு தனி அடையாளமும் தனி பெயரும் இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு திராவிட கட்சிகள் மணப்பாறைக்கு முறுக்கை விட அதிகமாக கொடுத்தது அல்வா தான். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அல்வாவாகி போனது” என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “உறுப்பினர் மணப்பாறை முறுக்கை பற்றி பேசினார். அந்த காலத்தில் மணப்பாறை பாடல் ஒன்று உள்ளது” என்று கூறி ‘மக்களைப் பெற்ற மகராசி படத்தில் இடம்பெற்ற, ‘மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு’ என்ற பாடலை பாடினார். சபாநாயகர் இந்த பாடலை பாடிய போது முதல்வர் விஜய், இதை ரசித்து கேட்டார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டப்பேரவையில் பாட்டுப் பாடிய சபாநாயகர்; ரசித்துக் கேட்ட முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது, அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த நிகழ்வின் போது சட்டப்பேரவை சபாநாயகர் பாடல் ஒன்றைப் பாடியது அவையில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. சபாநாயகரின் இந்தப் பாடலை முதலமைச்சர் விஜய் ரசித்துக் கேட்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business